அச்சுவேலியில் கத்தி முனையில் வழிப்பறி!

அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி கொள்ளையர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அச்சுவேலி வைத்திய சாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று பாசாங்கு செய்து , திடீரென கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அதன் போது பெண்ணொருவரின்...

ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிக்க கோரி தெல்லிப்பளையில் போராட்டம்!

வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் (புதன்கிழமை) தெல்லிப்பழையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வட கிழக்கில் தொடர்சியாக காணி சுவீகரிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது. இது தடுத்து நிறுத்தப்படவேண்டும். அந்தவகையில் வலி வடக்கு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி போராடவேண்டிய தேவையுள்ளது. ஆகவே தமிழர்களின்...
Ad Widget

பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்ப்பு!!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் குறைந்துள்ளதாலேயே எதிர்வரும் காலங்களில் பொருட்களின் விலையில் துரிதமான வீழ்ச்சியை காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு...

போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு!

மருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை. அவ்வாறான...

யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். [caption id="attachment_115664" align="aligncenter" width="612"] Concept of city life, strangers, dramatic stories[/caption] வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்படவேண்டும்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறித்த கூட்டம் தொடர்பில் நல்லூர் தொகுதிவெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர்த் தொகுதிக் கிளையின்...

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்!!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு நேற்று(01.11.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் லிட்ரோ...

உக்ரைன் போர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

உக்ரைன்-ரஷ்ய போர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனில் தொடரும் போர் மற்றும் நெருக்கடிகள் உலகளவில் தொழிலாளர் சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இதன் காரணமாக மந்தநிலை நிலவி வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கில்பர்ட் ஹூங்போ செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்....

மட்டுவில் பகுதியில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!

மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்ற போது , ஆலயத்தினுள் செல்வதற்காக கால் கழுவும் இடத்தில் கால் கழுவும் போது , கால் வழுக்கி விழுந்துள்ளார். அதன் போது...

வடக்கில் போதையை கட்டுப்படுத்த விசேட வழிகாட்டல் குழு அமைப்பு!

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு விசேட வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் நேரடித் தலையீட்டில், வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். வடக்கு...

போராட்டத்திற்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நவம்பர் 2ஆம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கவனயீர்ப்பு போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,...

இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களின் விலைகள் 400 வீதத்தினால் உயர்வு!!

இறக்குமதி செய்யப்படும் சில வகை மருந்துப் பொருட்களின் விலைகள் 300 முதல் 400 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. னவே இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளுக்கு விலைப் பொறிமுறை அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்தன கல்கந்த கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், விலைச்சூத்திரம் ஔடத கட்டுப்பாட்டு...

ரஷ்யாவின் ஏவுகணைகளை தாக்குதல்: தண்ணீர் இன்றி தவிக்கும் உக்ரைன் மக்கள்

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கிவ்வில் உள்ள மக்கள் தண்ணீருக்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேயர் விட்டலி கிளிட்ச்கோவின் கருத்து தெரிவித்ததாவது, “கிவ் நகரில் 40% நுகர்வோர் தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும், 270,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை” என்றும்...

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை நீடிப்பு- பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில்...

நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு !

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுள்ள பாணின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாணின்விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சூரன்போரில் வாள் வெட்டு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ரன்போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் கஜானந்தன் (வயது 38) ஆகிய இருவருமே காயமடைந்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கரத்தை பங்குருமுருகன் ஆலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சூரன் போர் திருவிழா இடம்பெற்றது....

யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாம ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தனர். இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது. இதன்போது நீதி அமைச்சர்...

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பெற்றோர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுடிருந்தனர்.

சுமந்திரனால் தமிழ் தேசியம் தேய்ந்து செல்கிறது – கே.வி. தவராசா குற்றச்சாட்டு

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற சிறீதரநின் கருத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொள்வதாக இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கூறிய இந்த விடயத்தினை நான் கட்சிக்குள்...

பாணின் விலை குறைகிறது!

பாண் ஒன்றின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரையில் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமது நிர்வாக சபை கூடி இறுதி செய்யும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா சந்தையில் போதிய அளவில் கிடைப்பதால் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தச்...
Loading posts...

All posts loaded

No more posts