பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை(புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது என அரசு நினைக்கிறது – வேலன் சுவாமிகள்

வடக்கிலேதான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளது,வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற ஒரு போலியான முகத்தினை இலங்கை அரசு காலம்காலமாக ஏற்படுத்தி பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார். வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம். எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் வடகிழக்கினை பிரிக்கமுடியும்...
Ad Widget

13வது திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய மகாநாயக்க தேரர்கள் யாழ். விஜயம்!

13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதால் ஏற்படும், சாதக பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளடக்கிய 20 பௌத்த துறவிகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாண சர்வ மத குழுவின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ,...

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ. ஆனோர்ல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டமை சட்டவிரோதமானது எனக்கோரி, அதனடிப்படையில் அவரது பதவி நியமனம் குறித்த வர்தமானி அறிவித்தலைச் செல்லுபடியாற்றதாக அறிவிப்பதற்கும், முதல்வராக ஆனோர்ல்ட் தொடர்வதற்கு இடைக்காலத் தடை...

மீண்டும் 950 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிவாயு விலை!

சந்தையில் கிடைக்கும் விலைக்கு ஏற்ப 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 950 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டுமென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு இருப்பு இருப்பதால், முன்பதிவு வெளியிடப்பட்ட விலையில் மட்டுமே விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

“சகல அரச நிறுவனங்களும் இழுத்து மூடப்படும்”! வீதிக்கு இறங்க தயாராகும் அரச ஊழியர்கள்

அரச ஊழியர்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச நிறுவனங்களை மூடி அனைத்து அரச ஊழியர்களும் வீதிக்கு இறங்குவர் என அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் தொடர்பில் நிதி அமைச்சில் நேற்று கடிதமொன்றை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்களின்...

7.8 ரிக்டர் நிலநடுக்கம் – 500 பேர் பலி!

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம்...

உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு?

சமையல் எரிவாயுவிலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உற்பத்திச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே ஏராளமான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் விலையை திருத்த வேண்டிய கட்டாயம்...

மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு நீதியை பெற்றுத் தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த...

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட இந்தியா அனுமதிக்காது – மாவை

இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள். ஊடகங்கள் கேள்விகளாக்குவதும் அதற்கு பதில்கள் கூறுவதும் சிறந்த விடயமல்ல என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தனித்து வாக்கு கேட்பதற்கு இந்தியா...

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நேற்று (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறூவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாயினாலும் 05 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது. எனவே நேற்று நள்ளிரவில் இருந்து 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,743 ரூபாய்க்கும் 5 கிலோ...

அரச ஊழியர்களின் சம்பளம் தாமதமாகலாம்! ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் அமைச்சர் தகவல்

தற்போது அத்தியாவசிய செலவினங்களுக்காக பணத்தை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்தப் புறம்பான செயல்களுக்கும் பணத்தைச் செலவழிக்கும் திறன் திறைசேரிக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பணம் செலவழிக்கப்பட்டால், அரச ஊழியர்களின் சம்பளம்,...

ரஷ்யாவின் நட்சத்திரமாக போற்றப்பட்ட ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

ரஷ்யாவின் நட்சத்திரமாக போற்றப்பட்ட Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தொடர்பான காணொளியை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இணையத்தில் வெளியிட்டுள்ளதுடன், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. உக்ரைனில் இராணுவ ட்ரோன்கள் மூலம் படம்...

பேரணிக்கு ஆதரவு நல்குங்கள் – வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறைகூவல்!

தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு நாம் தயாரில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்சங்க செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியா ஊடகஅமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படாதநிலையில் 37...

வலி.வடக்கில் இராணுவத்திடமிருந்த காணி கையளிப்பு : மீள்குடியேறவுள்ள குடும்பங்களுக்கு உதவித் தொகை

வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி வெள்ளிக்கிழமை (3) உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதோடு , மீளக்குடியமர்த்தப்படும் 197 குடும்பங்களுக்கும் தேவையான உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து...

கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள புதிய வசதி

கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடவுச்சீட்டுக்களை விண்ணப்பதாரர்களின் நிரந்தர முகவரியில் மட்டுமின்றி தற்காலிக வசிப்பிடத்தின் முகவரிக்கும் அவற்றை தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கடவுச்சீட்டைக் கொண்டு வர வேண்டிய தற்காலிக முகவரியையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட...

கட்சிகளை பிளவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை: மாவை

கட்சிகளை பிளவுபடுத்தக்கூடியவாறு செயல்பட்டவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (02.02.2023) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து ''இலங்கை தமிழரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவ கட்சியாக இருந்துகொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி...

ஓராண்டை நெருங்கும் உக்ரைன் போர்! பதிலடி கொடுக்க தயாராகும் புடின் தரப்பு!!

ரஷ்யா உக்ரைனை ஊடுருவி ஓராண்டை நெருங்கும் நிலையில், உக்ரைன் போரின் ஓராண்டு நினைவு நாளின்போது ரஷ்யா எதையாவது செய்யக்கூடும் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். ஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனை ஊடுருவியது. சிறிது நாட்களில் உக்ரைனை வென்றுவிடலாம் என ரஷ்யாவும், இது விரைவில் முடிந்துபோகும் சிறிய பிரச்சினை என...

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம்!

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் (புதன்கிழமை) இப் போராட்டம் இடம்பெற்றது. இதன் போது “அநீதியான வரிவிதிப்பை நிறுத்து”, “அரசின் ஊழலால் விழுந்தவர்களை வரி ஏறி மிதிக்கிறது”, “பணத்தை எடுத்தவரிடம் கேட்பதே நீதி எங்களிடம் கேட்பது அநீதி”...

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது. இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தத்துடன், லங்கா ஐஓசியும் நேற்று நள்ளிரவு...
Loading posts...

All posts loaded

No more posts