இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் !!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023) யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது சாவகச்சேரி சந்தை கட்டிட தொகுதியின் மேல் தங்கியுள்ள இராணுவத்தினர் சிவில் மற்றும் இராணுவ உடைகளுடன் மாணவர்களை புகைப்படமெடுத்து அச்சுறுத்தல்...

அடுத்த சில நாட்களில் பாரிய சூறாவளிக்கு சாத்தியம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது நேற்று (09.05.2023) வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அது வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு சூறாவளியாக...
Ad Widget

இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள இராணுவத்தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், 60 ஆளில்லா விமானங்களை கொண்டு ரஷ்யா கடுமையாக தாக்கியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், கருங்கடல் நகரான ஒடிசா மற்றும் பிற நகரங்களை இலக்காக கொண்டு, ரஷ்யா இன்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஈரானில் தயாரிக்கப்பட்ட 60 கமிகேஜ் ஆளில்லா விமானங்களை கொண்டு...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்!!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து வைத்தனர். குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்பில் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவிக்கையில், தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால்...

இன்று முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியினை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றினையும் வலிகளையும் இளைய தலைமுறையினருக்கு கடத்தும் செயற்பாடாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக...

தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!!

தியகமவில் நடைபெற்றுவரும் 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றெடுத்த ஹாட்லி கல்லூரி வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், குண்டெறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இந்த இரண்டு தங்கப் பதக்கங்களையும் திங்கட்கிழமை (08) சில மணித்தியாலங்கள் இடைவெளியில் மிதுன்ராஜ் வென்றெடுத்தமை விசேட...

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும்!! – டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் நேற்றையதினம்(08.05.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த வளாகம் புலிகளின் தேவைக்கான பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் அதை அவர்கள் தமது முகாமாக...

தீவிரமடையும் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்! தீப்பற்றி எரிந்த உணவு சேமிப்பு கிடங்கு

உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான ஒடேசாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் உணவு சேமிப்பு கிடங்கொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் கிர்கிவ், கெர்சன், மைகோலே , மற்றும் ஒடேசாவில் ரஷ்யா 16 ஏவுகணைகள் மூலம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடேசாவில் உள்ள...

யாழில்.ஒருவருக்கு மலேரியா

யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் மலேரியா நோயின் உள்ளூர் தொற்று இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டது. அதன்பின்னர் இதுவரை உள்ளுர் பரம்பல்...

மையல் எரிவாயுவின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5 கிலோ 100 ரூபாய் குறைக்கப்பட்டு 3,638 ரூபாயாகவும் 5 கிலோ 40 ரூபாய் குறைக்கப்பட்டு 1,462 ரூபாயாகவும் 2.3 கிலோ 19 ரூபாய் குறைக்கப்பட்டு 681 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்!

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

இலங்கையில் பனிஸ் ஒன்றின் விலை 23,200 ரூபா!!!

இலங்கையில் நடத்தப்பட்ட ஏலம் ஒன்றில் கிம்புலா பனிஸ் எனும் பேக்கரி உணவுப்பொருள் 23,200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது . அனுராதபுரத்தில் கலென்பிந்துனுவெவ பகுதியிலுள்ள மகளிர் சங்கமொன்றினால் இந்த கிம்புலா பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. குருநாகல் கொலனியா விகாரையில் நடைபெற்ற ஏலத்தின் போது 23,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த பனிஸ் 2 அடி நீளம், 1 அடி...

உக்ரைன் மீதான போர் தந்திரோபாயங்களில் மாற்றம்: ரஷ்யாவின் பயங்கர திட்டம் அம்பலம்

உக்ரைன் மீதான ரஷ்ய போர் ஓராண்டை கடந்து இன்று 433 ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் தந்திரோபாயங்களை ரஷ்யா மாற்றி உள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக் இதனை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா சமீபத்தில் ஏவிய 18 ஏவுகணைகளில் 15-ஐ உக்ரைனிய...

வரணியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

கொடிகாமம், வரணிப் பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து...

வவுனியாவைச் சேர்ந்தவரை கடத்திவந்து யாழில் சித்திரவதை!! 3 பெண்கள் உள்பட 11 பேர் கைது!!!

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ் வான் ஒன்றும் மற்றும்ங3 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யகத்...

அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க ​கோரிக்கை!

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ். லவகுமார் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை தனியார் விடுதியில் மே தினத்தை முன்னிட்டு இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

யாழில் மே தின ஊர்வலம்!!

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து நேற்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது !!!

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். 92-ஒக்டேன் பெட்ரோல் விலை 7 ஆல் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தற்போதுள்ள கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என அச்சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டிக்கு வழங்கப்படும் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் தொழிற்சங்கங்கள்...

யாழில் இளம் பெண்கள் இருவரை பலியெடுத்த கோர விபத்து!! மேலும் இருவரின் நிலை கவலைக்கிடம்!!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை (01.05.2023) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் - அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். இந்த விபத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த நவநீதராசா நிலக்சனா (வயது 26)...

ரணிலுக்கு சவால் விடும் சம்பந்தன்!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்" எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (01.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வ கட்சிப் பேச்சு...
Loading posts...

All posts loaded

No more posts