Ad Widget

அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் தீவிரமடைந்த போரில் டிசெம்பர் மாதம் தொடக்கம் தற்போது வரை 100,000 ரஷ்யர்கள் பாதிக்கப்படடுள்ளனர் எனவும் அவர்களில் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர் என வெள்ளை மாளிகையின் மதிப்பீட்டின்படி என மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று (01.05.2023) இந்த எண்ணிக்கை புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்க உளவுத்துறையின் அடிப்படையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

எனினும் உளவுத்துறை இந்த எண்ணிக்கை விபரங்களை எவ்வாறு பெற்றது என்பதை அவர் விவரிக்கவில்லை.

உயிரிழந்தவர்களில் பாதி பேர் தனியார் வாக்னர் குழுவின் கூலிப்படையினரால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வீரர்கள் என்று தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கடுமையான போர்கள் பாக்முட் நகரைச் சுற்றி நடந்துள்ளன, அங்கு வாக்னர் துருப்புக்கள் மற்றும் பிற படைகள் உக்ரைனிய துருப்புக்களுடன் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன.

“இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், பல மாத சண்டை மற்றும் அசாதாரண இழப்புகளுக்குப் பிறகு ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி பின்வாங்கியுள்ளது” என்று கிர்பி கூறினார்.

உக்ரைனிய உயிரிழப்புகள் பற்றிய மதிப்பீடுகளை வெள்ளை மாளிகை வழங்கவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உக்ரைனிய தரைப்படைகளின் தலைவர் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி, ரஷ்யா நகரத்தை கைப்பற்ற “அதிகபட்ச முயற்சியை” தொடர்ந்து மேற்கொண்டதாகவும் ஆனால் அது இதுவரை தோல்வியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts