ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு – தவராசா

வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தடையாக இருக்கின்றார் என்பதற்கு ஆதாரங்களுடன் உரிய விடயங்களை படிமுறையாக தந்தால், வடமாகாண ஆளுநருக்கு எதிராக வடமாகாண சபை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயாராகவிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்துக்கான...

கணவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்! – மனைவி

தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (வயது 26) முகமாலைப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு சாட்சியமளித்தார் பிரபாகரன் பாலேஸ்வரி. ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சாட்சியமளித்த குறித்த பெண்...
Ad Widget

முல்லைத்தீவில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்!

நாளை வியாழக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முள்ளியவளை ஐயனார் கோவில் வளாகத்தில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தலுக்காக பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார். பிரசாரக் கூட்டத்தில் மக்களை கலந்துகொள்ளுவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து சேவைகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதனையிட்டு நேற்று முதல் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் விசேட பாதுகாப்பு...

வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்கமாட்டார்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருக்கும் வரை வடபகுதி மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின இந்து நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சர்வாதிகார மனோநிலையில் இருக்கிறார். எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் இடைவெளியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும்...

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஆரம்பம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது....

ஊழலை ஒழிப்பதே எனது இலக்கு – ஜனாதிபதி

இலங்கையிலிருந்து வறுமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழல் என்பவற்றை முற்றாக ஒழிப்பதே தனது இலக்கு என ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற momentum வர்த்தக கலந்துரையாடலில் புதன்கிழமை(17) கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

ஊடகவியலாளர் வீட்டில் ஆவணங்கள் திருட்டு

கிளிநொச்சி, திருமுறிகண்டி பகுதியில் வசித்து வரும் பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிலிருந்த முக்கிய ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை (16) பகல் திருடப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் முறைப்பாடு பதிவு செய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஊடகவியலாளரும், அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்த நேரம், வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள இனந்தெரியாத நபர்கள், அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றுள்ளதாக...

எண்ணெய் கசிவு வழக்கு; ஜனவரி 14இல் கட்டளை பிறப்பிக்கப்படும்

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி கட்டளை பிறப்பிக்கப்படும் என மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவன மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுற்றுவட்டாரத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறி, தெல்லிப்பளை...

ஐந்து சந்தி குழு மோதல் ; மூவர் கைது

ஐந்து சந்தி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழு மோதலின் போது, ஐந்து சந்தியில் அமைந்துள்ள பீடா கடை, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், வாள்வெட்டுக்கு இலக்கான மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...

இராணுவ ஆக்கிரமிப்பு எமது ஆட்சியில் இருக்காது – ரணில்

அபி­வி­ருத்தி என்ற பெயரில் அனைத்து துறை­க­ளிலும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பினை மேற்­கொள்ளும் இரா­ணுவ ஆட்சி எமது அரசாங்கத்தில் இருக்­காது. எமது ஆட்சியில் அதன் கட­மை­யினை மட்­டுமே இரா­ணுவம் செய்யும் என தெரி­வித்த எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்கை மறைக்­கப்­பட்டு விட்­டது. அதனை மீட்­டெ­டுக்கவேண்டும் எனவும் குறிப்­பிட்டார். சுற்­று­லாத்­துறை சார் வர்த்­த­கர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்றை நேற்று...

த.தே.கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவித்தால்!! வடக்கில் மஹிந்தவின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்!

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டாவது பதவிக் காலத்துடன் ஆட்சியைக்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மைத்திரிபால இரகசிய ஒப்பந்தம்!- ஜனாதிபதி மஹிந்த!!

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றஞ்சாட்டினார். சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தகவல் வெளியிடுகையில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய...

அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இறுதிப் போட்டி ஆடி முடித்த மஹேல, சங்கா..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5ற்கு 2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் அமைச்சர் டக்ளஸ்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற அமைச்சர், காயமடைந்த ஈ.பி.டி.பி. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் நலம் விசாரித்தார். இதன்போது ஈ.பி.டி.பி...

பாகிஸ்தான் பள்ளிக் கூடத்தில் படுகொலை 141 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கே பெஷாவர் நகரில் தாலிபான் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்கள் செவ்வாய் கிழமை மாலை முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரையும் தாம் கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் குண்டுகள் ஏதாவது இருக்கின்றதா என்பதை ஆராயும்...

விஷ்ணுவர்தனுடன் இணையும் விக்ரம்?

விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதுதவிர, சங்கர் இயக்கத்தில் எமிஜாக்சனுடன் விக்ரம் இணைந்து நடித்து ‘ஐ’ படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விக்ரம், விஷ்ணுவர்தன்...

லிங்கா படம் வசூல் ரூ.100 கோடி தாண்டியது

கடந்த 12–ந் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது. ரஜினி 4 வருடங்களுக்கு பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால்...

தமிழ்நாட்டையும் வடக்கு கிழக்குடன் இணைத்து தமிழீழம் அமைப்பதே புலிகளின் திட்டமாம்!

ஜம்மு காஷ்மீர் விடுதலை அமைப்பின் பிரிட்டன் கிளை, உட்பட இந்தியாவின் தடைசெய்யப்பட்ட பல அமைப்புகளுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பிருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது குறித்த விசேட நீதிமன்றின் முன் இடம்பெற்ற விவாதத்தின்போதே இவ்வாறு இந்திய மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டையும், இலங்கையின் வடகிழக்கு மற்றும் ஆந்திரா, கேரளா,...

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பினர் சுருதியை அணுகி கேட்டபோது உடனே சம்மதித்தாராம். இன்டர்நெட் மூலம் இந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. சுருதிஹாசன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார். அவற்றை வீடியோவில் பதிவு செய்து இணைய தளங்களில் வெளியிடுகின்றனர். சுருதி...

வடக்கில் இவ்வருடத்தில் 2122 பேர் டெங்குவினால் பாதிப்பு

வடமாகாணத்தில் 2014ஆம் வருடத்தின் இந்த மாதம் வரை 2 ஆயிரத்து 122 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பதாக யாழ்.பிராந்திய வட மாகாண சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருக்கின்றது. கடந்தாண்டை விடவும் இந்த வருடம் மோசமான நிலை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களிலும் டெங்கு நோயின் தாக்கம்...
Loading posts...

All posts loaded

No more posts