Ad Widget

மாணவனின் கை துண்டிப்பு: சந்தேகநபர்கள் அறுவர் கைது

செல்லமுத்து மைதானத்தில் சனிக்கிழமை(25) நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், அதேயிடத்தைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களை திங்கட்கிழமை (27) இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டில் வவுனியாவைச் சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை...

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய நபர் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!

2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான் லாகூர் நகரில் வைத்து தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பாகிஸ்தான் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை நடவடிக்கைகளினைத் தொடர்ந்து இச்சந்தேக நபர் உட்பட மூன்று தலிபான் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய...
Ad Widget

நடத்துநர் உயிரிழப்பு: சாரதிக்கு விளக்கமறியல்

மிதிபலகையில் நின்று பயணித்த தனியார் பஸ் நடத்துநர் கீழே வீழ்ந்து உயிரிழந்தமையடுத்து, கைது செய்யப்பட்ட அந்த பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, திங்கட்கிழமை (27) உத்தரவிட்டார். கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி சென்று கொண்டிருந்த...

வெள்ளை வேன் விவகாரம்: மூவர் குறித்து இரகசிய அறிக்கை

கடந்த அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளைவேன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்பு பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்த வாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி,...

பசில் எம்.பி.க்கு 3 மாதங்கள் விடுமுறை

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் விடுமுறை வழங்கியுள்ளது.

பேக்கரிகளில் தராசு கட்டாயம்

பேக்கரி மற்றும் பேக்கரி உற்பத்தி செய்யும் இடங்களில் , தின்பண்டங்களின் நிறையை நுகர்வோர் அறிந்துகொள்வதற்காக அவ்வாறான இடங்களில் தராசு வைக்கப்படுவது கட்டாயமாகும் என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்துள்ளார். இந்த சட்டம், பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் நிலையங்களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பல்வேறான நிறைகளில் பாண்...

போரால் நலிந்த எமக்கு வீட்டுத் திட்டம் வழங்குக; முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்றுப் போராட்டம்

பெரும் போர் அழிவுகளில் சிக்கி வசதிகளற்று வாழ்க்கையை நகர்த்தும் எங்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாது திருப்பப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?. எமக்கு வீட்டுத் திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கோரி முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மக்கள் நேற்று கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தினர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கிழக்குக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 வரையான...

வாள் வெட்டு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

வடமாகாணத்தில் இடம்பெறும் குழு மோதல்கள், வாள் வெட்டு கலாசாரம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெ.இந்திர குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலை கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் கைது...

அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே – இரா.சம்பந்தன்

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால...

கிளிநொச்சியில் ரயில் – ஜீப் மோதி நால்வர் பலி

கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்து மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் ஜூப் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டம் மீது இன்று வாக்கெடுப்பு

முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்...

19க்கு கையுயர்த்துவதை விட வேறொரு கௌரவம் இல்லை – ஜனாதிபதி

ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என்றும்...

மரணச்சடங்கில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இதன்போது கொலைக் குற்றவாளிகளைக் கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர். திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது" , "இவர்களை பொலிஸார் இதுவரை...

சக மாணவர்கள் மீதான வாள் வெட்டு, கைதை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர். கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் பகுதியில் இசைநிகழ்ச்சியொன்றை பார்த்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர்மீது இனந்தெரியாத குழுவினர்...

மகிந்தவுடன் இணைய தயாராகும் மைத்திரி

தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவுடன் இணைந்து செயற்பட ஆயத்த மாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேறறத்தை கருத்திற்கொண்டே மகிந்தவுடனான...

19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டி

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணியினரால் யாழ்ப்பாணத்தில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. '19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் சூழ்ச்சியை தோற்கடிப்போம்' என தலைப்பிடப்பட்டே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு, ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கும்வேளை, முன்னைய ஜனாதிபதி மஹிந்த...

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்புவதை தவிர்க்கவும் – பா.அரியநேத்திரன்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சவூதி அரேபியாவில்...

சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார்.

இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் : நால்வர் கைது

சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர்....

நில அதிர்வுகளால் அதிரும் காத்மாண்டு: பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3...
Loading posts...

All posts loaded

No more posts