ஹொட்டலில் ரகசியக் கமரா: மக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கையின் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் அறைகளை வாடகைக்கு விடும் விடுதியொன்றில் ரகசியக் கமரா மூலம் அறைகளில் நடைபெறுபவற்றை பதிவு செய்து வந்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். பிளக் பொயிண்ட் இன் ஒரு துவாரத்திற்குள் ரகசியக் கமரா வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த ஹொட்டலில் உள்ள அறைகளில் சூட்சுமமான முறையில் அந்தரங்க விடயங்கள் பதிவு செய்யப்பட்டு அவை வேறொரு...

கூகுள் தேடுபொறியில் இலங்கையின் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின்...
Ad Widget

2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்பு ஆரம்பமானது

2016 ஆம் ஆண்டுக்கானதும் 79 ஆவதுமான வரவு செலவுத்திட்ட வாசிப்பு இன்று (21) சற்று முன்னர் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாசிப்பு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மூத்த ஊடகவியலாளர் உயிரிழப்பு

மூத்த தமிழ் ஊடகவியலாளரான ச.கதிரவேற்பிள்ளை வியாழக்கிழமை (19) உயிரிழந்துள்ளார். ஊடக நிறுவனம் ஒன்றில் தனது ஊதியத்தை பெற வந்தபோது, கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இவர் உயிரிழந்துள்ளார். தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இவர் செய்திகளை சேகரித்திருந்தார். பொலிஸாரின் தாக்குதலால் அவருடைய ஒரு கண் பார்வையை இழந்தார்....

விக்னேஸ்வரனின் செயற்பாட்டுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணி பூரண ஆதரவை வழங்கும்

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நேர்மையாகவும் நீதியாகவும் பற்றுறுதியோடு செயற்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அனைத்து நடவடிக்கைகளிற்கும் தமிழர் விடுதலை கூட்டணி தனது பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் நாகேந்திரன் டர்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு ஒரு தீர்க்கமான...

சிதம்பரநாதன் சுரேந்தினி இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தெரிவு

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணான சிதம்பரநாதன் சுரேந்தினி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hutch அறிமுகப்படுத்தும் SmartShare தரவு சேவை

தரவு பாவனை ஒதுக்கீட்டினை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் நிர்வகிக்கும் சிரமங்களைப் போக்கும் தனித்துவமான வசதி... இலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற 3G வலையமைப்புக்களுள் ஒன்றான Hutch, “Hutch SmartShare” வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Hutch வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகிக்கும் பல்வேறு வகையான சாதனங்களுக்கு ஒரு பொதுவான தரவு நிலுவையை பேணுவதற்கு இடமளிக்கும் ஒரு புத்தாக்கமான அறிமுகமாக...

சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் கடிதம்! – விரைவில் சந்திக்கிறார்

தமக்கிடையில் ஏற்பட்டுள்ள சில முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, வடமாகாண சபை விடயங்கள் உட்பட்ட பல்வேறு அம்சங்கள்...

இரகசிய தடுப்புமுகாம் குறித்து யாரும் சாட்சியமளிக்கவில்லையாம்! – பரணகம

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருப்பதாக தமது ஆணைக்குழுவில் எவரும் சாட்சியமளிக்கவில்லை என்றும், அவ்வாறு யாராவது சாட்சியமளித்திருந்தால் நாங்களும் திருமலையில் உள்ளதாகக் கூறப்படும் இரகசிய முகாமுக்கு சென்று பார்த்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார் காணாமல்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. நாங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எமது ஆணைக்குழுவின் ஊடாக...

‘தமிழ்ப் பெயர்ப் பலகைகளை தகர்த்தெறிவோம்’ – ராவணபலய

யாழ்ப்பாணத்தில் நாகதீபு என்ற பெயரை, நயினாதீவு என்று பெயர்மாற்றம் செய்தால், கண்ணில் தென்படுகின்ற அனைத்து தமிழ் வீதிகளின் பெயர்ப் பலகைகளையும் இலங்கையில் எப்பகுதியில் இருந்தாலும் சரி, தகர்த்தெறிவோம் என்று ராவணபலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். பௌத்தர்களின் புனித தீவான யாழ்ப்பாணம், நாகதீப என்ற பெயரை நயீனாதீவு என்று பெயர் மாற்றம்...

புலமைப்பரிசில் பரீட்சை வேண்டுமா, வேண்டாமா?

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், கிடைக்கவேண்டிய 15ஆயிரம் பேருக்கும் கிடைக்கும் அதில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை' என்று தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்காலத்தில் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் ஆராயவேண்டும்' என்றார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...

வடக்கு மாகாண சபையில் பெரும் அமளி!

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14...

எக்காரணத்திற்காகவும் பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது!

ஜீ.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் தபால் மூலம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவுச்சீட்டுக்கள் அதிபர்களுக்குக் கிடைத்ததும் உடனடியாக அவற்றை மாணர்களிடம் வழங்க வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நுழைவுச்...

2 மணிக்கு வரவு செலவுத் திட்டம்!

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவு செலவுத்திட்டம் குறித்து ஒருபோதுமில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும்...

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹிந்த

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. அத்தியவசிய ஆவணங்கள் சிலவற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் நேற்று இடம்பெற இருந்த...

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை

இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம்...

சிவாஜிக்குப் பிறகு பசுபதிதான்: ஆர்.வி.உதயகுமார்

விமல், நந்திதா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சல’. இதில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். இதில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “அஞ்சல படத்தை திலிப் சுப்பராயன்...

இறுதிச்சுற்றுக்கு நாள் குறிச்சாச்சு

ண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுதிச்சுற்று’. தமிழ் மற்றும் இந்தியில் இப்படம் தயாராகியுள்ளது. இந்தியில் ‘சால காதூஸ்’ என்று தலைப்பில் வெளியாகவுள்ளது. ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா.கே.பிரசாத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் மாதவன் நீண்ட தலைமுடி, தாடி வைத்து குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் சில...

சீன, நார்வே பிணைக்கைதிகள் படுகொலை

சிரியா, ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நாடுகளுக்கு வருகிற மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களை கடத்திச்சென்று, பிணைக்கைதிகளாக வைத்திருந்து, கொலை செய்வதை ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த பான் ஜிங்குய், நார்வே நாட்டின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டெட் ஆகிய 2 பேரை...

நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்று கேட்ட இளைஞருக்கு பாரீஸ் மக்களின் பதில் – வீடியோ

பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள்....
Loading posts...

All posts loaded

No more posts