- Sunday
- May 17th, 2026
வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட மயிலிட்டி இறங்குதுறையில் மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வர்த்தகர்கள் கடற்படையினரின் உதவியுடன் பொருட்களை இறக்குமதி செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த இறங்குதுறை காணப்படுதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் மயிலிட்டி பகுதியைச்...
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களின் முடிவில் 309 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட் ஆகாமல் 171 ரன்கள் எடுத்தார். டாஸ் வென்ற இந்திய...
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் இடம் பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசாவினா...
பீப் பாடல் பிரச்சினைக்குப் பின் சிம்பு - அனிருத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்புவிற்கு நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறதே தவிர சற்றும் குறைந்தபாடில்லை.இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனிருத் தற்போது வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சிம்பு-அனிருத் இருவரும் மீண்டும் ஒரு...
எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய பிரதான பாடசாலைகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த வெட்டுப் புள்ளிகளை ஒரு புள்ளியால் குறைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் காரணமாக புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அதிகளவான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கற்கான வாய்ப்பு கிடைக்கும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்...
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என, அச் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அண்மையில் கோதுமை மாவுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளாக செய்திகள் வௌியாகின. எனினும் கோதுமை...
கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார். திங்கட்கிழமை (11) மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
துபாயில் ஆளில்லாத வீடுகளில் நுழைந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை துபாயின் அல் பார்ஷா (Al Barsha) பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் கொள்ளையர்கள் புகுந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டு அவர் வந்து பார்த்த வேளை, 250,000 திர்ஹாம் பெறுமதியான கடிகாரங்கள் மற்றும் 100,000 திர்ஹாம் பணம்...
அனைத்து பேக்கரி தயாரிப்புக்களினதும் விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய வரிகள் காரணமாக அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி தயாரிப்புக்களினதும் விலையையும் அதிகரிக்க நேரிட்டுள்ளதாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்ந்தன குறிப்பிட்டார். இதனடிப்படையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அத்துடன் பனிஸ் ஒன்றின்...
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் 4 அமைச்சர்களும் கலந்துகொள்வதில்லை. இனிவரும் கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். வடமாகாண சபை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் குழுக்கூட்டம் வடமாகாண சபையில் திங்கட்கிழமை (11) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர்...
காமெடி வேடத்தில் நடித்து வந்த கருணாஸ் பின்னர் கதாநாயகன் ஆனார். இவர் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ வெற்றி பெற்றது. அடுத்து ‘அம்பா சமுத்திரம் அம்பானி’, ‘சந்த மாமா’, ‘ரகளபுரம்’, ‘லொடுக்குப் பாண்டி’ படங்களில் நடித்தார். தொடர்ந்து இது போன்று கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அவருக்கு அமையவில்லை. எனவே, இப்போது மீண்டும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில்...
தமிழர்கள் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி, வருடந்தோறும் ரசிகர்களுக்கு விருந்தாக பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும். கடந்த வருடம் (2015-ல்) ‘ஐ,’ ‘ஆம்பள,’ ‘டார்லிங்,’ ‘ஆய்வுக்கூடம்’ ஆகிய 4 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருட பொங்கலுக்கும் 4 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. பொங்கலுக்கு முன்தினமே போகி பண்டிகை அன்று (14-ந் தேதி) 4...
இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் மர்ம மனிதன் திரைப்படத்தில் விக்ரம் திருநங்கையாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 என்றதுக்குள்ள படத்திற்குப் பின்னர் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் திரு ஆகியோரின் படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் ஆனந்த் ஷங்கர் படத்தில் முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார் விக்ரம். தற்போது தமிழின்...
கடந்த சில தினங்களாக செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் தீவிரமாய் பரவிவரும் சமாச்சாரம்.. பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அஜீத்... தமிழக பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முன் களமிறங்கப் போகிறார் என்பது. இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத அஜீத்தின் ரசிகர்களும் சில ஊடகங்களும் அவர் அரசியலில்...
விஜய்யின் தெறி டீசரை படக்குழுவினர் வருகின்ற குடியரசு தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முன்னதாக இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு...
மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது...
யாழ்.செட்டித்தெரு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திருமதி சாந்தினி மாணிக்கத்தின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. குறித்த பாடசாலை அதிபர் சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னமும் 3 வருடகாலம் உள்ளது. எனினும் அவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளதால் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். ஆனால் குறித்த...
நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும்...
Loading posts...
All posts loaded
No more posts
