Ad Widget

உண்மையிலேயே அரசியலுக்கு வருகிறாரா அஜீத்…?

கடந்த சில தினங்களாக செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் தீவிரமாய் பரவிவரும் சமாச்சாரம்.. பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் அஜீத்… தமிழக பிஜேபியில் தன்னை இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முன் களமிறங்கப் போகிறார் என்பது.

இதில் எந்த அளவு உண்மை இருக்கும் என்பதைக் கூட யோசிக்காத அஜீத்தின் ரசிகர்களும் சில ஊடகங்களும் அவர் அரசியலில் குதிப்பது உறுதி என்கிற அளவுக்கு எழுத ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் உண்மையில் அஜீத்துக்கு இந்த எண்ணம் இருக்கிறதா? அதுவும் பாஜகவில் சேர்ந்து அரசியலை ஆரம்பிக்கப் போகிறாரா அஜீத்?

விசாரித்தால் அத்தனையும் 100 பர்சன்ட் கப்சா என்கிறது அஜீத் தரப்பு. இதையெல்லாம் கிளப்பி விடுவதே பாஜக தரப்புதானாம்.

முதலில் ரஜினியை இழுக்கப் பார்த்தனர். அதற்காக தினசரி ஒரு கதையை அவிழ்த்து வந்தனர் பாஜக தலைவர்கள். ரஜினி வரமாட்டார் என்பது தெளிவானதும், அடுத்து விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு வலை வீசி வருகிறார்களாம். அதன் எதிரொலிதான் இந்த அஜீத் வதந்தியாம்.

இன்னொன்று, அஜீத் வெளிப்படையாகவே அம்மா ஆதரவாளர். பாஜக தலைகீழ் குட்டிக்கரணம் அடித்தாலும் அஜீத் சிக்கமாட்டார் என்கிறார்கள்.

Related Posts