மாதகலில் விசித்திர மீன் இனம்!

மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். மாதகல், குசுமந்துறை கடற்பரப்பின் ஊடாகக் கடற்றொழில் புரியும் மீனவர் ஒருவரின்...

ISIS இன் புதிய வரைபடத்தில் இலங்கைக்கு இலக்கு!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அண்மைய வரைபடத்தில் இலங்கையும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் தளமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நிலைமை, மோதல்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான “சர்வதேச மோதல் நிலை தொடர்பான ஆய்வு நிலையம்” இறுதியாக மேற்கொண்ட ஆய்வில்...
Ad Widget

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது

அரச வங்கிகள் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது என உறுதியளிக்கும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் “தயார் நிலை ஏற்பாடாக” (Standby Arrangement) கடன் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அரசு அறிவித்தது. இது தொடர்பாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் மேலும் தெரிவிக்கையில் பொது எதிர்கட்சி எனக்கூறிக்கொள்வோர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து மக்களை,...

முல்லைத்தீவில் காணாமற்போனோர் குறித்த சாட்சியங்கள் பதிவு!

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப் பதிவு விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணிமுதல் இடம்பெற்ற இவ் விசாரணையில் 120 பேர் சாட்சியம் அளித்துடன், காணாமற்போனோர் குறித்து 23 புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. நான்கு பிரிவுகளாக இந்த விசாரணைகள் இடம்பெற்றன. இன்று...

ஆசிரியையை காணவில்லை

மட்டுவில் மத்தியைச் சேர்ந்த வைரமுத்து ஞானகௌரி (வயது 41) என்ற ஆசிரியையை, கடந்த 23ஆம் திகதி முதல் காணவில்லையென்று அவருடைய உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். புதன்கிழமை (23) கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர், வீடு திரும்பவில்லை என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் சந்திகளில் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட வீதிச் சந்திகளில் மாநகர சபையால் குவிவு வில்லைகள் பொருத்தும் நடவடிக்கைகள் வியாழக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார். யாழ்ப்பாண வீதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வாகன சாரதிகள் அவதானிக்கும் வகையில் இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்படுகின்றன. கே.கே.எஸ் வீதியும் யாழ்ப்பாணம் இந்துக்...

கோட்ட, உதவி கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால், கோட்டக்கல்வி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நல்லூர், கோப்பாய், வெலிஓயா ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை - 3 இலங்கை கல்வி நிர்வாக சேவை - 2 (பொது) ஆளணியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும்...

வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவம் காணும்: சுரேஸ்

இலங்கையில் 2 இலட்சம் இராணுவம் இருக்கின்ற நிலையில் அதில் 1½ இலட்சம் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. 20 ஆயிரம் இராணுவம் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவம் ஏனைய மாகாணங்களிலும் நிலைகொண்டுள்ளனர். வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதும்' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (25)...

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்க்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை!

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். சென்னையில் அவரை கும்மிடிப்பூண்டி, புழல் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் 12 பேர் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சுதந்திரம் பெற்றது முதல் பல...

மின்மாற்றிகள் வெடிப்புக்கு சதி வேலைகள் காரணமாம்!!

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்புகளுக்கு சதி வேலைகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை நிராகரித்து விட முடியாது என ஜேர்மன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பியகம, கொட்டுகொட பிரதேசங்களின் மின்மாற்றிகள் அண்மையில் வெடித்தன. இதனால் நாடு முழுவதும் சில நாட்கள் நீண்ட நேர மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மின்மாற்றிகள் எப்படி வெடித்தன என்பது...

மீள்குடியேற்றம் குறித்து ஜனாதிபதி, பிரதமரிடம் எடுத்துரைப்போம்! உண்ணாவிரதம் இருக்கும் மக்களுக்கு கூட்டமைப்பு

"முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் அபகரித்துள்ள பொதுமக்கள் காணிகளை மீளக் கைளித்தல், மீள்குடியேற்றத்தை பூர்த்தி செய்தல் குறித்து எதிர்க்கட்சியத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கபடும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

கம் உதாவ நிகழ்ச்சித் திட்டம் மீண்டும்!

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸாவினால் ஆரம்பிக்கப்பட்ட 'கம் உதாவ' (கிராம எழுச்சி) நிகழ்ச்சித் திட்டத்தினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் சில தேர்தல் தொகுதிகளில் கம் உதாவ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 1980 களில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டின் நாலாபுறமும் வாழும் மக்களை நெருங்கும் பொருட்டு கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தினை...

வழமைக்கு மாறான உஷ்ணம்: வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் கடந்த...

மும்மத அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்டார் போப்!

போப் பாண்டவர் பிரான்ஸிஸ் முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்து மத அகதிகளின் கால்களை கழுவி முத்தமிட்டதுடன் நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். ‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம்’ எனவும் அவர் கூறியுள்ளார். பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு...

பிரசெல்ஸ் தாக்குதல் – 06 பேர் கைது!

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பாக 06 சந்தேக நபர்களை பொலிஸார் உடனடி கைது செய்துள்ளதாக வெளிநாட்டு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாயன்று பிரசெல்ஸ் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று தாக்குதல்களை நடாத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டதுடன் 250க்கும்...

வடக்குக்கான நல்லிணக்க பயணம் ஆரம்பம்

தெற்கு ஊடகவியலாளர்களையும் வடபகுதி ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று(26) ஆரம்பமாகிறது. வெகுஜன ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையிலான ஊடகவியலாளர்கள் குழு இன்று யாழ். நகர் நோக்கிப் புறப்படுகிறது. 'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தப் பயணத்தில் தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கும்,...

8 கலோ கஞ்சாவுடன் வந்தவர் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட்டம்

கேரளா கஞ்சா 8 கிலோ பொதியை விற்பனைக்கு கொண்டு வந்தவர் பொலிஸாரை கண்டதும் கஞ்சா பொதியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடியுள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். கோப்பாய் இராச வீதி பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், குறித்த நபரை கைதுசெய்வதற்காக...

புற்றுநோயால் நடிகர் திடீர் மரணம்!

மலையாள படவுலகின் பழம்பெரும் நடிகர் ராகவன். இவரது மகன் ஜிஷ்னு (வயது 35).தந்தை நடிகர் என்பதால் குழந்தை நட்சத்திரமாக ஜிஷ்னு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு என்ஜினீயரிங் படித்து வேலையில் சேர்ந்த ஜிஷ்னு மீண்டும் ஆர்வம் காரணமாக திரையுலகில் புகுந்தார். இளம் நடிகராக வலம் வந்த ஜிஷ்னு நித்ரா, உஸ்தாத் ஓட்டல், பேங்கிங் ஹவர்ஸ்...

சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் மக்களுக்கு பாதிப்பு- சம்பந்தன்

சம்பூர் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் அளவுக்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படை முகாம் இருந்த 177...

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் (குரூப்1) சந்தித்தன. தென்ஆப்பிரிக்க அணியில் டுமினி, கைல் அப்போட்...
Loading posts...

All posts loaded

No more posts