- Monday
- May 18th, 2026
யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு, இளைஞனொருவர் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொண்ட வாள்வெட்டில், படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் தர்மிகன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு வாள்வெட்டுக்குள்ளாகியுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கொட்டடி பகுதியில் உள்ள...
புதிய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு நாட்டிற்குள் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தற்போது அனைத்து உலக நாடுகளினதும் ஆசீர்வாதம் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதன் காரணமாக அரசியல் சந்தர்ப்பவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்காமல், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் பொறுப்பேற்ற வேலைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். பொலன்னறுவை நகரத்தின் சுற்றுவட்டப் பாதையின்...
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் ஒன்றை கொண்டு வரும் செயற்பாட்டை தற்போதைய அரசாங்கம் நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் யோசனைகள் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். புதிய அரசியலமைப்பு ஒன்று தொகுக்கப்படுவதாக இருந்தால் அது பல்வேறு...
திரைப்பட நடிகர் சஞ்சய் தத் எந்த காரணங்களின் அடிப்படையில், யாரால் தண்டனைக் காலத்துக்கு முன்பாக சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்கிற விவரங்களைத் தருமாறு பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனுக்காக வாதாடிவரும் வழக்கறிஞர்களில் ஒருவரான இரா இராஜீவ் காந்தி இதை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பெரிய ஹிட்டானதையடுத்து, இப்படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி பேசிய ‘எனக்கு இன்னொரு பேர்...
பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான். இவர்கள் இருவரையும் வைத்து பொழுது போக்கு டெலிவிஷன் சேனல் ஒன்று 'பிக்பாஷ் ரியாலிட்டி ஷோ' நிகழ்ச்சிக்காக சூட்டிங் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்தது. அங்குள்ள காளி கோவிலில் நடந்த சூட்டிங்கில் ஷாருக்கானும், சல்மான்கானும் ‘ஷூ’ அணிந்து சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி...
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. மேக்ஸ்வெல் 83 பந்தில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களடன்...
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சீர்திருத்த திணைக்கள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் தை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதன்படி பாலியல் துஸ்பிரயோகத்தினால் 149 சிறுவர்களும் பாலியல் சேஷ்டைகளினால் 18 சிறுவர்களும், மற்றும் உடல்...
தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான உபகுழுவின் செயற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இந்த மாத இறுதியில் அதன் அறிக்கை முன்வைக்கப்படும் என்றும்...
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னாலை சுப்பிரமணியம் முருகன் கோயில் அருகில் உள்ள வீட்டுக்குள் சனிக்கிழமை (16) இரவு நுழைந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வீட்டில் உள்ள அனைவரையும் கத்தி முனையில் அச்சுறுத்தி 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் வீட்டு கதவை...
மாணவ தாதியர் பயிற்சிக்காக 1000 மாணவ மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் ஆலோசனைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்கி தரமான சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக சுகாதார சேவையின் மனித வளங்கள்...
நெடுந்தீவு கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்து ஒப்படைத்துள்ளதாக யாழ்.மாவட்ட கற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்திய புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஒரு படகில் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை இரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கோ பௌத்த மதத்திற்கோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை; நாட்டை பிரிப்பதற்கு இடமில்லை
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பௌத்த மதம் சீர்குலையப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை அலரி மாளிகையில் விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், புதிய...
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் ஒரு மணியளவில் காங்கேசன்துறை தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பளை சேர்ந்த மகேந்திரராசா மயூரன் (வயது-28) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணியில் உள்ள குடிசையினை பார்வையிட செல்வதாக கூறிச் சென்ற நிலையில், தமது மகனை காணாத குடும்பத்தினர்...
இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸை நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை அணியின் வீரர்களான ரங்கண ஹேரத் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோரை...
போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான உள்ளக விசாரணைகளை எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னராக ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய சர்வ மதத் தலைவர்கள், முன்னுதாரணம் கொண்ட சர்வதேச நாடுகள் மற்றும் அரச பிரமுகர்களுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. ஐ.நா மனித...
கடும்போக்கு வாதிகள் வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். யாழ்ப்பாணம் மருதனார் மடம் - இராமநாதன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த...
தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரித்தானியா வின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தமிழ் மொழியில் தைப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருடைய உரையில் இரண்டு தருணங்களில் தமிழ் மொழியை பிரயோகித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் யாழில் நேற்று நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் வைபவத்திலும் பங்கேற்றிருந்தார். இதன்போது...
அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் மேலுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் உரையாற்றுகையில், நீண்டகாலமாக தமிழ்மக்கள் சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் முகமாக இந்நாளை...
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும்...
Loading posts...
All posts loaded
No more posts
