ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம் – பிரதமர்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துலதற்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ஊடகவியலாளர் ரணில் விக்ரமசிங்கவிடம், அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சம்பூர் சிறுவன் மரணம் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்!!

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் விதுர கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வயிற்றில் பெரியகல் ஒன்று கட்டப்பட்ட நிலையில் சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் நேற்று அதிகாலை 12.10 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டு இருந்தார். கொடூர பாலியல் வன்புணர்வின் பின்னரே குறித்த சிறுவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முன்னதாக சிறுவனை தேடிச் சென்ற...
Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மூவர் இன்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 அரசியல் கைதிகள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்நிலையில்...

‘போர்க்களத்தில் ஒரு பூ’ இயக்குநர், தயாரிப்பாளருக்கு அழைப்பாணை!

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் 'போர்க்களத்தில் ஒரு பூ' திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில் இந்த அழைப்பாணையினை சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது....

வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும்!

வடக்கில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் ஜோன் ஸ்னோ வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும், வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்....

யாழ்.பல்கலைக்கழகத்தில் பௌத்த கோயில் வேண்டும்- பௌத்த மாணவர்கள் ஒன்றியம்

யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பௌத்த கோயில் வேண்டும் என கோரி துண்டுப்பிரசுரங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. இது யாழ்.பல்கலைக்கழக பௌத்த மாணவர்கள் ஒன்றியத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆழஊடுருவும் அணி பற்றிய தகவல்கள் ஐ.நாவுக்கு வழங்கப்படாது! – ஜனாதிபதி உறுதி

ஆழ ஊடுருவும் அணியின் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போர் காலத்தில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் தாக்குதல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐ.நா...

சித்தார்த்தனும் ஸ்கொட்லாந்து செல்கிறார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ள நிலையில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் இன்றைய தினம் அங்கு செல்லவுள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பயணமாகியுள்ள நிலையில், அவருடன் இணைந்து கொள்வதற்காகவே...

அதிகாரப் பகிர்வு யோசனை தயாரிக்க வடக்கு மாகாணசபையும் விசேட குழுவை உருவாக்கியது!

புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை தயாரிக்க வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார். இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல்...

யாழ் மருத்துவபீடத்தில் வவுனியா மாணவி சாதனை

யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் ஐந்து துறைசார் தங்க பதங்கங்களை பெற்றுக் கொண்டதுடன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்ததை தண்டிக்கொண்ட தமிழ்...

இரணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்றால் அரசியல்கைதிகளும் தண்டிக்கப்படவேண்டும் – சந்திரிகா

ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில்...

தமிழில் பேச முடியாமைக்கு மன்னிப்புக் கோரினார் சந்திரிகா!

தனக்கு தமிழ் மொழியில் உரையாற்ற முடியாமல் போனமை வருத்தமளிப்பதாகவும் அதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் மக்கள் ஆட்சி முறை ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினை எதிர்ப்பவர்கள் கொலை செய்யப்படவில்லை....

அவுஸ்திரேலியாவை வென்றது இந்தியா

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. [caption id="attachment_57240" align="aligncenter" width="900"] India's Yuvraj Singh, center left, celebrates catching out Australia's Chris Lynn with his teammates during their T20 International cricket match in...

பேரவையின் அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைபு

தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு, எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் வைத்து வெளியிடப்படவுள்ளது. வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் தொடர்பில் தகவல் தாருங்கள்

சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்த தங்கவேல் செல்வராணி வீரைய்யா என்ற இப்பெண், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 17ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார். அப்பெண்ணிடம் கடவுச்சீட்டோ அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களோ இல்லை. ஆகையால் அப்பெண்தொடர்பில் தகவல் தெரிந்தோர். 011 - 2259341, 011 - 2259954 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்குமாறு வெளிநாட்டு...

குடாநாட்டில் பனைமரங்கள் அனுமதி இன்றி தறிப்பு- வடமாகாண சபையின் அக்கறையீனமே காரணம்?

குடாநாட்டில் அண்மைய காலங்களாக பனைமரங்கள் உரிய அனுமதி பெறப்படாமல் தறிக்கப்படுவதால் பனைவளம் அழிவடையும் நிலை எதிர்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதுவிடயத்தில் வடக்கு மாகாணசபை அக்கறையற்று இருக்கின்றமை மிகுந்த வேதனையளிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எனது அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினூடாகவே பனை...

உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் புதிய கொள்கை!- ஜனாதிபதி

தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டு மக்களில் சுமார் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உணவு தயாரிப்பு வேலைத்திட்டம்...

பிக்குகள் ஏற்படுத்திய குழப்ப நிலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் உத்தரவு

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பிக்குகள் சிலர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், முழுமையான அறிக்கையை, மல்வத்து மற்றும் கோட்டை மஹாநாயக்க தேரர்களுக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார். பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்...

யாழில் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது வடக்கிற்கான நுழைவாயில் வர்த்தக கண்காட்சி

சர்வதேச வர்த்தக கண்காட்சி 2016 யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் கே.விக்னேஷ தெரிவித்தார். சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை கண்காட்சி...

சம்பந்தனால் முடியாது- கோட்டாபய

மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதிய கட்சியை உருவாக்க இது சிறந்த சந்தர்ப்பம் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆர்.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால், அவரிடம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களின் எதிர்ப்புகள் தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது எனவும்...
Loading posts...

All posts loaded

No more posts