இலங்கை கிரிக்கட் அணியினரை சந்தித்தார் பொன்சேகா

இலங்கை கிரிக்கட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கை கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவின் அழைப்பின் பேரில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு சென்ற பீல்ட் மஷல் சரத் பொன்சேகா, யுத்த காலத்தில்...

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை

அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று முன்தினம் (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்...
Ad Widget

வித்தியா படுகொலை சம்பவம்; குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதவான் எச்சரிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதுவரையில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் நேற்று கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கு...

தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்!

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில்...

வன்னி பிரதேச பாடசாலை விடுதிகளில் தங்கியுள்ள ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்

வன்னிப் பிரதேசங்களில் கடமையாற்றுகின்ற பல ஆசிரியர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கியிருந்து தமது அர்ப்பணிப்பான சேவையைச் செய்து வருகின்றனர். அதிலும் அனேக ஆசிரியர்கள் பெண்களாகும். இவர்கள் தங்கியுள்ள விடுதிகள் இரவு நேரங்களில் தட்டப்பட்டு அங்குள்ள ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இத்தகைய சம்பவம் முழங்காவில் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பெண் ஆசிரியர்களின் விடுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த விடுதிக்கு அருகில் இராணுவ முகாம்...

வவுனியாவில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்ட சிறுமி: துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை

வவுனியா உக்குளாங்குளம் பிரதேசத்தில் கடந்த 16 ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 13 வயது சிறுமி,துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வவுனியா அவசர மரணபரிசோதகர் நேற்று தீர்மானித்துள்ளார். குறித்த சிறுமி கடந்த 16 ஆம் திகதி பாடசாலைக்கு செல்ல முடியாது என கூறி வீட்டில் இருந்துள்ளார்.எனினும் அவரது மூத்த சகோதரன் பாடசாலைவிட்டு வீட்டிற்கு வந்த...

கிளிநொச்சியில் சிறுமி தற்கொலை முயற்சி!!

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய குறித்த மாணவி நேற்று மாலை தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். எனினும் கிணற்றில் மாணவி பாய்ந்த சத்தத்தை அறிந்த அயலவர்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் குறித்த...

22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டம் அரசியல் கைதிகள் அறிவிப்பு

இரண்டு வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமக்கான விடுதலையை வலியுறுத்தி இரண்டு தடவைகள் உண்ணாவிரத போராட்டத்தில் அரசியல் கைதிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் உறுதிமொழி்க்கு அமைய அவர்கள்...

186 பதக்கங்களுடன் நாடு திரும்பினர் இலங்கை வீரர்கள்!

இந்தியாவின் கௌகாத்தியில் இடம்பெற்ற 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி விட்டு, விசேட விமானம் மூலம் நாடு திரும்பிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், அதிகாரிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களை பெற்றோலிய மற்றும் கனிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜகருணா, இஷாக் ரஹ்மான் உள்ளிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள்...

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல்போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவப்...

காணாமற்போனோர் பிரச்சினைக்கு சம்பந்தனின் பிரேரணை நிரந்தர தீர்வு தர வேண்டும்!

அரசியல் கைதிகள் விவகாரம் - காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் எதிர்வரும் 23ம் திகதி -செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை வெறுமனே விவாதத்துடன் முடிவடைந்துவிடக் கூடாது. இதனூடாக ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும். என்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கோரிக்கை...

ஷேன் வார்ன் : சச்சினிடம் அடி.. அனகோண்டா பாம்பிடம் கடி..

டிவி ரியாலிட்டி ஷோ ஒன்றில், அனகோண்டா வகை பாம்பிடம் கடி வாங்கியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே. இருப்பினும் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, 'ஐயம் ஏ செலப்ரட்டி.. கெட் மீ அவுட் ஆப் ஹியர்' என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியொன்றில்...

மேற்கத்திய இசை கேட்ட சிறுவனுக்கு மரண தண்டனை!!

ஈராக் மற்றும் சிரியா நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிர்வாதிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள என்ற நகரில் அய்ஹாம் ஹுசைன்(வயது 15) என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். சில தினங்களுக்கு முன்னால் தந்தையின் கடைக்கு சென்ற சிறுவன், மேற்கத்திய இசையை ரசித்து கேட்டுள்ளான்....

தந்தைக்கு எச்ஐவி இருந்ததாக வதந்தி, மகனுக்கு பள்ளிக் கூட அனுமதி இல்லை

குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன. பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார். இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள்...

’24’ படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையையும், மிகப் பெரிய வெற்றியையும் தரும்

'24' படத்தின் மூலம் இழந்த வெற்றியை மீண்டும் மீட்டெடுத்து ஆக வேண்டும் என்று சூர்யா '24' படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். 'பசங்க 2' படத்தில் அவர் நடித்திருந்தாலும் அது ஒரு சிறப்புத் தோற்றம்தான், அவருடைய ரசிகர்களுக்கான படமாகவும் அந்தப் படம் அமையவில்லை. 'அஞ்சான்' படத்தில் படிந்த அவப் பெயரைத் துடைக்க 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தையும்...

மிருதன் 2ம் பாகம் தயாராகிறது

ஜெயம்ரவி, லட்சுமிமேனன், நடித்துள்ள மிருதன் படம் இன்று வெளியாகி உள்ளது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவரும் சோம்பிஸ் வகை திரைப்படமாகும். ஒருவித வைரசால் பாதிக்கப்படும் மக்கள்...

காயங்களுடன் மருத்துவமனையில் சிம்பு!

சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா அமைந்த இந்த சண்டைக் காட்சியின் போது, சிம்புவிற்கு மூக்கு மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சிம்புவுக்கு அடிப்பட்ட விஷயம்...

ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு விடுதலை

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க அவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வௌிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் பிரதம...

மீள்குடியேற்றத்தின் பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள்

மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...

மாங்குளத்துக்கு எப்போது போவீர்கள்? – சுரேஸ் கேள்வி

வடமாகாணத்தின் அரசியல் நிர்வாக கட்டமைப்புக் கொண்ட தளமாக மாங்குளம் மாற்றப்படவேண்டும் எனக் கூறப்பட்ட போதும், அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தின் கலாசார தளமாக யாழ்ப்பாணத்தையும்...
Loading posts...

All posts loaded

No more posts