தொடர்கின்றன துப்பாக்கிச்சூடுகள்! – வெலிக்கடை சிறை முன் கர்ப்பிணிப் பெண்ணும் இலக்கு!!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 03.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த பெண் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ள பெண் தற்போது...

கைதான இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் நீக்கப்பட்டுள்ளனவா என ஆராய உத்தரவு!

சில நாள்களுக்கு முன்னர் கொழும்பு நகரில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்களின் உடல் உறுப்புக்கள் ஏதும் நீக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பு, வெள்ளவத்தை மற்றும் ஹவ்லொக் வீதி ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிலரைக் பொலிஸார் சில நாட்களுக்கு முன்பாகக் கைதுசெய்தனர்....
Ad Widget

சூளைமேட்டுச் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை!

தமிழ் நாட்டின் சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து வீடியோ கொன்பரன்ஸிங் மூலமாக சாட்சியமளித்துவிட்டு வருகை...

சுவிச்சர்லாந்தில் இருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்ப எதிர்ப்பு

சுவிச்சர்லாந்தில் உள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கான சரியான தருணம் இதுவல்ல என்று சுவிட்சர்லாந்தில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சுவிச்சர்லாந்திற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்தார். மீண்டும் நாட்டிற்கு திரும்பி நாட்டின் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஒத்துழைக்குமாறும்,...

இலங்கையிலிருந்து பாதுகாப்பு பணியாளர்களை எதிர்பார்க்கிறது மலேசியா

இலங்கையர்களை பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள மலேசியா அரசு தீர்மானித்துள்ளது. மலேசியாவில், இதுவரை காலமும் பாதுகாப்பு காவலர் பதவிகளில் நேபாள நாட்டவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், இலங்கையர்களையும் இவ்வாறு பாதுகாப்பு காவலர் பதவிகளில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் டட்டுக் நூர் ஜஸ்லான் மொஹமட் கூறியுள்ளார். நேபாளத்திலிருந்து இந்தப் பணிகளுக்கு வருவோரின் தொகை...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது!

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட 17 பேருடன் கூடிய படகு ஒன்றை காலி கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் நீர்கொழும்பில் இருந்து படகு மூலமான பயணத்தை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17 பேருடன் கூடிய படகு நேற்று மாலை காலி கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

நடுவானில் விமானி மாரடைப்பால் மரணம்! 220 பயணிகளை காப்பாற்றிய துணை விமானி

சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித் பின் முகமது அல்–முகமது ஓட்டி வந்தார். 34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. கிங் கலித்...

எனது அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன்- வடமாகாண முதலமைச்சர்

நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை கெடுத்தவர் அமைச்சர் மனோகணேசன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி பழைய மாணவர்களால் அமைக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரதம...

இன்று முதல் கொழும்பில் விஷேட சோதனை நடவடிக்கைகள்

அண்மைய நாட்களாக தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி மேற்பார்வையின் கீ்ழ் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 102 தொலைபேசி வீதித் தடைகள் ஏற்படுத்தி...

எம்மீதான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை வன்மையாக கண்டிக்கின்றோம் – ஈ.பி.டி.பி

காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. காணாமற்போதல் மற்றும் கொலைகள் தொடர்பான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பியை தொடர்புபடுத்தி கூறப்படுகின்ற கதைகள், அடிப்படை ஆதாரமற்றவையாகவும், எமது அரசியல் எதிராளிகளின் சதிகள் நிறைந்த உள்நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும் காணப்படுகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...

மஹா சிவராத்திரி தினத்தில் புனிதம் பேணப்பட வேண்டும்!

சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக் கூடாது. இந்த விரதம் மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி தினத்தன்று ஒரு வேளை பகல் உணவுண்டு சிவராத்திரி தினத்தன்று இரவு நித்திரை செய்யாமல் எல்லாம் வல்ல பரம் பொருளான சிவனைப்...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்.மைந்தன்!

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களின் பெயர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கெட் காப்பாளர் றிஷாந் ரியூடர் மற்றும், முதல்வரிசை துடுப்பாட்ட வீரரான எஸ்.சஞ்சீவன் ஆகியோரின் பெயரே தேசிய கிரிக்கெட் அணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய அணியை தயார்படுத்தும் நோக்கத்தில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் போட்டித் தொடரிலும்,...

அய்லான் மரணம்: இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை!

துருக்கியில் 3 வயதுச் சிறுவன் அய்லான் உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்புக்குக் காரணமான அகதிகள் படகு விபத்து தொடர்பாக, 2 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஏஜியன் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது....

பாதுகாப்பான கடவைகள் அமைக்க தொடர்ந்து பின்னடிக்கிறது ரயில்வே!

ரயில் கடவைகள் இல்லாத இடங்களில் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்ட பின்னர்தான் அதனைப் பற்றிப் பேசுகின்றோம். இதனைத் தடுப்பதற்கு பாதுகாப்புக் கடவைகள் அமைக்குமாறு ரயில்வே திணைக்களத்துக்குப் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ரயில்வே திணைக்களம் தொடர்பான விடயம்...

ஏ.ஆர்.ரகுமானின் அடுத்த இசை நிகழ்ச்சி!

சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள் வெளிநாடு, உள்நாடு என பல ஊர்களில் பிரமாண்ட இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், இளையராஜா தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் அடிக்கடி இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அவரைத் தொடர்ந்து யுவன்ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரும் அமெரிக்கா,...

ஸ்ரீதிவ்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த மருது!

சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சூப்பர் ஹிட்டானதால் அடுத்தடுத்து அவர் பல படங்களில் கமிட்டானார். ஆனால் பின்னர் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றபோதும் பரபரப்பாக ஓடவில்லை. அதனால் எதிர்பார்த்தபடி ஸ்ரீதிவ்யாவுக்கு மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் புக்காகவில்லை. அதோடு, மலையாள ரீமேக் படமான பெங்களூர் நாட்கள் படமும் அவரை ஏமாற்றிவிட்டது. இந்த...

ஓய்வே அறியாத ஜி.வி.பிரகாஷ்குமார்!

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கும் நடிகராக இருப்பவர் விஜயசேதுபதி. அதிகபட்சம் 3 மாதங்களுக்கு மேல் அவர் எந்த படத்தையும் இழுத்தடித்ததில்லை. அதோடு, அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க பல நிறுவனங்கள் வெயிட்டிங்கில் இருப்பதால் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாசும் தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்....

சுவிசில் இருந்து ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்படும் ஆபத்து!

சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் தேடியுள்ள ஈழத்தமிழர்கள் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதாக சுவிஸ் அகதிகள் சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் இடம்பெற்றுவரும் நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் தமது நாட்டில் புகலிடம்...

நகுலேஸ்வரம் வரை பஸ் சேவை நீடிப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து மாவிட்டபுரம் வரையில் இடம்பெற்று வந்த 769 ஆம் இலக்க பஸ் சேவையானது, நேற்று வெள்ளிக்கிழமை (04) முதல் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய முன்றல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கீரிமலை நகுலேஸ்வரத்தின் திருவிழா கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இனிவரும் நாட்களில் ஆலயத்தின் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால், ஆலயத்துக்கு...

பிராந்திய விமான நிலையமாக பலாலி மாற்றப்படவுள்ளது!!

“பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு விமான சேவையை நடத்த தீர்மானித்துள்ளோம். இதனை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை” என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் வீடுகள் இல்லாத 65 ஆயிரம் பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts