Ad Widget

நடுவானில் விமானி மாரடைப்பால் மரணம்! 220 பயணிகளை காப்பாற்றிய துணை விமானி

சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது.

விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித் பின் முகமது அல்–முகமது ஓட்டி வந்தார்.

34 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருந்தது. கிங் கலித் விமான நிலையத்தில் தரை இறங்கும்போது விமானத்தை ஓட்டி வந்த விமானி முகமது அல்–முகமதுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

அடுத்த நொடியில் அவர் மரணம் அடைந்தார். இதனால் விமானம் தடுமாறியது.

இதனை கண்ட துணை விமானி ரமிடென்சுஜி துரிதமாக செயல்பட்டு விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விமானி இறந்ததை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த அவர் விமானத்தை சாதுர்யமாக தரை இறக்கினார். அவரது முயற்சியால் 226 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Posts