- Sunday
- June 14th, 2026
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்படவுள்ளன என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கோப்பாய்...
"ராஜபக்ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல். திருடப்பட்ட விதங்கள் இன்னும் மூன்று மாதங்களில் அம்பலப்படுத்தப்படும். சட்டத்தரணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்."- இவ்வாறு பிதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது....
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும்,...
கடும்பனிப் புகார் காரணமாக லண்டன் மிற்சம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்தில் நடுத்தர வயதுடையவரான சுகந்தி என்பவரே உயிரிழந்தவராவார். 'சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றும் இவர் 3 பிள்ளைகளின் தாயாராவார். பாதசாரிகளுக்கான நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதால் இவ்விபத்து...
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களை உட்சேர்ப்புச் செய்வதற்கான திகதி ஜூலை மாதம் முதலாம் திகதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இலங்கையில் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், பெற்றோலிய வளத்துறை அமைச்சு பாரிய தொகை கடன் செலுத்த வேண்டியிருப்பதே என்று அமைச்சர் கூறியுள்ளார். பெற்றோல் விலையை குறைப்பதற்கு பதிலாக கடன் சுமையிலிருந்து பொதுமக்களுக்கு...
உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடப்படுவது அரசியல் தேவையின் காரணங்களுக்காக அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நேற்று பாராளுமன்றில் தினேஷ் குணவர்தன உள்ளூராட்சிமன்ற தேர்தல் சம்பந்தமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு உண்மையான தேவை இருப்பது ஐக்கிய தேசிய கட்சிக்கே என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.
எனக்கும் அப்பாவை கட்டிப்பிடிச்சுக் கொண்டு பைக்கில இருந்து பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்குது மாமா ஆனா…. அப்படி நடக்குமா? என தனது பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் அருள்பிரகாஸ் றஜிதா தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவி. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவரும் றஜிதாவின் அப்பா அருள்பிரகாஸ் வயது 44 கடந்த எட்டு வருடங்களாக...
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து கடந்த 18 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரும் இன்று வெள்ளிக்கிழமை பகல் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ் அரசியல் கைதி உறுதிப்படுத்தினார். மிகவிரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் சார்பாக நீதின்றத்தில் இன்று முன்னிலையான...
உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் சிறைச்சாலையினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் இதன்போது, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதால் அவர்களுக்கு எதிராக...
இருபதுக்கு இருபது உலக கிண்ண போட்டிகளின் பொருட்டு அணியை தேர்வுச் செய்த முறை தொடர்பாக தான் கவலை கொள்வதாக முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாகிய அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். இந்நாட்டில் வழமைக்கு மாறான முறையில் அணி தேர்வு இடம்பெற்றுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டார். கிரிக்கெட் போட்டி தொடர்பாக போதிய அறிவற்ற...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஆசிரியர் சங்கம் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளனர். நல்லிணக்க அரசே மௌனம் சாதிப்பது ஏன்?, அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை...
கடந்த காலங்களில், அனைத்துத் தரப்பினரும் எம்மை ஏமாற்றிவிட்டனர். அதனால், இனியும் எவரிடத்திலும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், எமது இந்த உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை' என்று கொழும்பு மெகசின் சிறைச்சாலையில், உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடத்திவரும் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,...
ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறையில் நோக்கி நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதம் பயணித்துக்...
ராடான் நிறுவனம் நடத்திய குறும்பட திருவிழாவில் இறுதி சுற்றுக்கு தகுதியான படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. உலக அளவிலான போட்டியில் அகதிகளாக செல்லும் குழந்தைகள் பற்றிய படமான 'ஓடம்' முதல் இடத்தையும், 'நிழல்' என்ற திகில் படம் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனை அஞ்சலி இயக்கி இருந்தார். அவருக்கு விருதை ஆர்யா வழங்கினார். பின்னர்...
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தவர். இதனால் தான் சினிமாவில் வெற்றி பெற்றதும் குறும்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'ஸ்டோன் பென்ஞ்' என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். நல்ல குறும்படங்களை தேர்வு செய்து அவற்றை இரண்டரை மணிநேர படமாக தொகுத்து ஒரு திரைப்படம் போன்று வெளியிடுவது. இதன் மூலம்...
ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், கார்த்தி என வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் சேர்ந்து தானும் வளர்ந்தவர் இயக்குனர் ராஜேஷ். 'சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களின் வெற்றி அவரை வெகு வேகமாக உச்சத்திற்குக் கொண்டு போனது. அதே வேகத்தில் 'அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'...
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மூலம் ஆசிரியர் சேவை 3.1(அ) இற்கு நியமனம் தொடர்பாக சேவை பிரமாணத்திற்கு முரணாக நியமனம் 11.03.2016 வழங்க இருப்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கையினை நேர்முகத்தேர்வில் பங்குபற்றிய பட்டதாரிகள் நேற்று (10.03.2016) வட மாகாண கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநர்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணிவரை அந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை இலங்கை கிரிகெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும், 25 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் யாழ். புனித பத்திரிசியார்...
Loading posts...
All posts loaded
No more posts
