Ad Widget

கார்த்திக் சுப்புராஜ் முயற்சி வெற்றி பெறுமா?

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் குறும்படங்கள் மூலம் சினிமாவுக்கு வந்தவர். இதனால் தான் சினிமாவில் வெற்றி பெற்றதும் குறும்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ‘ஸ்டோன் பென்ஞ்’ என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளார். நல்ல குறும்படங்களை தேர்வு செய்து அவற்றை இரண்டரை மணிநேர படமாக தொகுத்து ஒரு திரைப்படம் போன்று வெளியிடுவது. இதன் மூலம் குறும்பட இயக்குனர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு பென்ஞ் டாக்கீஸ் என்ற தலைப்பில் 6 குறும்படங்களை இணைத்து வெளியிட்டார். ஒரு சில தியேட்டர்களே அதனை திரையிட முன் வந்தன. பெரிய தியேட்டர்கள் ஒரு காட்சி மட்டுமே கொடுத்தது. அதனால் அந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, என்றாலும் மனம் தளராமல் தற்போது 5 குறும்படங்களை ஒருங்கிணைத்து ‘அவியல்’ என்ற பெயரில் வெளியிடுகிறார்.

இதில் நேரம், பிரேமம் படங்கைள இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் படமும் ஒன்று. இதில் நிவின்பாலி, பாபி சிம்ஹா நடித்துள்ளனர். இந்த 5 படங்களுமே பிளாக் காமெடி வகையை சேர்ந்தவை. இந்த முறை இந்த படங்களை திரையிடும் வேலையை தேனாண்டாள் பிலிம்ஸ் கவனித்துக் கொள்கிறது. இந்த முறை எப்படியும் வெற்றிபெறும் என்று நம்புகிறார் கார்த்திக்க் சுப்புராஜ். அவியல் வெற்றி பெற்றால் தமிழ் சினிமாவில் புதிய டிரண்ட் உருவாகும்.

Related Posts