- Sunday
- June 14th, 2026
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ச்சியாக பல கருத்துகளை முன்வைத்து வரும் நிலையில், அரசாங்கம் இந்த...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு ஒரு சில மாதங்களில் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றில்...
சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முயற்சித்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வேறு ஒருவரின் கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரும்பிராய் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை வென்றார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'சுப்பர் சிங்கர்'. இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. சுப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜகணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டனர். இவர்களில் பரீதாவும், ராஜகணபதியும்...
அண்மையில் பியகமவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொடவில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை. அத்துடன் இவை போன்று உலகில் எங்கும் மின்மாற்றி வெடிப்புகள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே இவை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார். இந்த வெடிப்புச் சம்பவங்கள்...
தட்டார் தெரு சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி விளக்க மறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார். கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்தியில் மோட்டார்...
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமரிக்க தூதரகம் தகவல் எதனையும் இன்னும் வெளியிடவில்லை. எனினும் கெசாப் தமது டுவிட்டரில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியல்...
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் தாயார் சோமசுந்தரம் தையல் பிள்ளை அவர்கள் 2016.03.18ம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் தனது 97வது வயதில் காலமானார். இவர் 1919.07.15ம் திகதி மாவிட்டபுரத்தைச்சேர்ந்த காசிப்பிள்ளை எள்ளுப்பிள்ளை தம்பதிகளின் நான்காவது மகளாக பிறந்து அதே மண்ணைச்சேர்ந்த சோமசுந்தரம் அவர்களை கரம்பிடித்து ஏழு பிள்ளைகளின் தாயாக இல்லற...
யாழ்.போதனா வைத்தியசாலை ஆண் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு, வைத்தியசாலை நிர்வாகம் பதில் நடவடிக்கை எடுக்காமையினைக் கண்டித்து போதனா வைத்தியசாலை ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்க்க சென்றிருந்த உறவினர் ஒருவருக்கும், குறித்த விடுதியில் இருந்த ஆண் தாதி ஒருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் மூண்டுள்ளது....
யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்குள் மத்திய கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடம் அமைப்பதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் நேற்று இடம்பெற்றது. மத்திய கலாசார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார். கல்வி அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் ஆகியனவின் ஏற்பாட்டில்...
உபாதைக்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இந்தியா சென்றிருந்த லசித் மாலிங்க கடந்த போட்டியில் பங்குபற்றி இருக்கவில்லை. முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவரால் போட்டியில்...
சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. தர்மசாலா, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்...
துபாயில் இருந்து ரஷ்யா வந்த விமானம், ரஷ்யாவின் ரோஸ்டவ் நகரில் தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது. அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள், பயணிகள் உள்ளிட்ட 59 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்ற்ப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் தோன்றிய குற்றபுலனாய்வு பிரிவினர்...
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் தொடர்பில் எழுகின்ற குற்றச்சாட்டை நிராகரித்த இந்திய துணைத்தூதுவர் நடராஜ், இந்த நடவடிக்கைகளுக்கு மக்களது காணிகள் ஒருபோதும் அபகரிக்கப்படாது என உறுதியளித்தார். அதேவேளை தேவைப்படும் பட்சத்தில் விமான நிலையத்திற்கு சொந்தமாகவுள்ள 500 மீற்றர் தொடக்கம் 800 மீற்றர் அளவிலான நிலம் பயன்படுத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்றும்...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டப் பணிகளில் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு நியாயமானது என்று மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். உலோகத்தில் அமைக்கப்படும் வீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அறிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியிருப்பதாகவும் அவர் ஐ.பி.சி...
வலி.வடக்கில் ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து உயர்பாதுகாப்பு வலைய எல்லையினை சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் பின்னகர்த்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள இராணுவத்தின் ஹொட்டல் மற்றும் துறைமுகங்களுக்குச் செல்பவர்களினை சோதனையிடும் சோதனைச்சாவடியும் இதன் போது பின்னகர்த்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள...
யாழ்.மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக் கொண்ட மர்ம ஆசாமி, மேற்படி தனியார் வங்கியுடன் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர் என குறித்த தனியார் வங்கி கூறியுள்ளது. மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தனியார் வங்கி ஒன்றில் வேலை பெற்று...
தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் சிறையில் போட்டாலும் தனது அரசியல் பயணத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பேரணி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 'ஜன சட்டன' (மக்கள் போராட்டம் ) என்ற பெயரில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் அணியின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினி (சுப்ரமணியம் சிவகாமி) எழுதிய "ஒரு கூர் வாளின் நிழலில்" என்ற நூலை கிளிநொச்சியில் வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த நூலை வெளியிடுவதற்கு காவல்துறையினர் முன்னர் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் தலையீட்டில் தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய...
Loading posts...
All posts loaded
No more posts
