வட மாகாண நீர்விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடமாகாணத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடல், திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் ஆரம்பமானது. வடமாகாணத்தின் நீர்வழங்கல்...

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு வேண்டும்

நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு கிட்டப்படவேண்டும். அதன்மூலம் மக்கள் அந்த அங்கிகாரத்தை பயன்படுத்தும் நிலை இருக்கவேண்டும். இந்த பொறுப்பை அரசாங்கம் ஐ.நாவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கும் தொழிலாளர்கள் இன்று கூறுகின்ற குறைபாடுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும்போது பல குறைகள் தீர்க்கப்படும்' என்று எதிர்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
Ad Widget

வாள்வெட்டுக்கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது

உடுவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (01) இரவு வாள்வெட்டினை மேற்கொள்வதற்குத் தயாராக இருந்த 5 இளைஞர்களை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நபர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் தடிகள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் கூறினர். இரவு நேர ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் சட்டவிரோதக் கூட்டம் கூடி நின்ற இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை...

முகமூடி நபர்கள் தாக்கியதில் இளைஞன் படுகாயம்

மருதனார்மடம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்குள் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை புகுந்த 5 பேர் கொண்ட குழு, அங்கு கள் அருந்திக்கொண்டிருந்த இளைஞனை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இணுவில் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கவனிப்பற்று காணப்படும் யாழ். மணிக்கூட்டு கோபுரம்

யாழ்பாணத்திலுள்ள மணிக்கூட்டு கோபுரம், கடந்த பல வருடங்களாக கவனிப்பார் அற்று இருக்கும் நிலையில், மாலை 4 மணி, 7 மணியாக அடையாளப்படுத்தப்படுவதுடன் அனைத்து நேரங்களுக்குமான ஒலிகள் மாறுபட்டே எழுப்பப்படுகின்றது. யாழ்ப்பாணத்தின் அடையாள சின்னங்களில் இம் மணிக்கூட்டு கோபுரமும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அடையாளச் சின்னங்களை பாதுகாக்க வேண்டி அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவது வேதனையளிப்பதாக சமூக...

சி.ஐ.டி எனக்கூறி கொள்ளை: 08 பேர் கொண்ட குழு கைவரிசை

மல்லாவி, கோட்டை கட்டிய குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த திருடர்கள், 12 பவுண் நகை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மல்லாவிப் பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை வேளை, வீட்டுக்கதவைத் திருடர்கள் தட்டியபோது, வீட்டிலிருந்தோர் கதவைத்...

மின்சாரம் தாக்கி சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் நாகையா செந்தூர்செல்வன் (வயது 44) எனப் பொலிஸார் கூறினர். நீர் இறைக்கும் இயந்திரத்தின் ஆழியினை போடும் போது திடீரென ஏற்பட்ட மின்...

புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் (வயது 46) இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனது வீட்டுக்கு இன்றையதினம் காலை 6.30 மணிக்கு வருகை தந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், தனது கணவரை...

மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று திங்கட்கிழமை (02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று முதல் வற் வரி அதிகரிப்பு!

பெறுமதி சேர்த்துக்கொள்ளப்பட்ட வரிக்கமைய நூற்றுக்கு 11 வீதமான வரியானது 15 வீதமாக இன்று முதல் அதிகரிக்கும் என்று தேசிய வருமான வரி திணைக்களம் அறிவித்துள்ளது. நிதியமைச்சின் முன்மொழிவுக்கமைய இவ் வற் வரி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 11 வீதமாக இருந்த வரியானது இன்று நள்ளிரவுக்கு முதல் மாற்றப்படாவிட்டால் நாளை(03) தொடக்கம் மாற்றமடையும். எவ்வாறிருப்பினும் இதுவரை...

ததேகூவின் மே தினப் பேரணி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தொழிலாளர்கள் தினம் நேற்று யாழ் இணுவில் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்த பேரணி யாழ் மருதனார் மடம் சென்று, அங்கிருந்து யாழ் இராமநாதன் கல்லூரியின் மைதானத்திற்கு வந்து அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக...

கபாலி டீசர் சாதனை! (வீடியோ)

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் 11 மணியளவில் வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், லைக்குகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. யூடியூப்பில் இந்த எண்ணிக்கையை காட்ட முடியாதளவிற்கு ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர். இதற்காக யூடியூப் நிறுவனம், தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரே நேரத்தில்...

வடக்கு பிரேரணை குறித்து பேசாமல் அதற்கான காரணத்துக்கு பதில் தேடுங்கள்

சேவையாளர்களாக நாட்டுக்கும் மக்களுக்கும் தௌிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயல்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெற்ற மேதின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடு தற்போது பொருளாதார ரீதியில் பின்நோக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இவ்வாறான சிக்கலான மற்றும் நெருக்கடியான சூழலில் முன்னோக்கி செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும்...

கூட்டுறவு அமைப்புகள் அரசியல் கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது

ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கூட்டுறவுத்துறையின் இன்றைய சரிவுக்கு கூட்டுறவு அமைப்புகளினுள்ளே கட்சி அரசியல் புகுந்ததும் ஒரு காரணம். ஒருபோதும் கூட்டுறவு அமைப்புகள் கட்சி அரசியலுக்கு இடமளிக்கக் கூடாது. கட்சிகளின் தொண்டர்படையாக இயங்கக் கூடாது என்று வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.05.2016) கிளிநொச்சி கூட்டுறவுக்...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் மேதினச் செய்தி

அந்நாளில் மிக விரைவாக சரிந்து சென்று கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் பெறுமதியை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த வேண்டிய எமது கடப்பாடு பற்றி - அன்றைய கடினமான சூழலுக்குள் இருந்தவாறே - சுட்டிக்காட்டியிருந்தோம். பல்கலைக் கழகத்தின் மீதான உயர்கல்வி அமைச்சின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட தலையீடு பற்றியும், அதுமட்டுமன்றி அந்த அமைச்சைச் சாராத பிற அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு...

அலையெனத் திரண்ட கூட்டுறவாளர்களால் அதிர்ந்தது கிளிநொச்சி நகரம்

கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது என்று வர்ணிக்கும் அளவுக்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை (01.05.2016) கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் கலந்து கொண்டிருந்ததோடு நூற்றுக்கணக்கான ஊர்திகளும் பங்கேற்றிருந்தன. வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கொடி அசைத்துத் தொடக்கி வைக்க கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த மேதினப்...

முகமூடி நபர்களின் கோடரி வெட்டுக்கு ஆசிரியர் படுகாயம்!

ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று அதிகாலை உட்புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சிலர் படுக்கையில் இருந்த ஆசிரியரை கோடாரியால் கொத்தியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தர்மலிங்கம் நடேஸ்வரன் வயது(46) என்ற ஆசிரியரே இவ்வாறு நெஞ்சில் கோடாரி கொத்துக்கு உள்ளான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில்...

தெல்லிப்பளையில் ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்பு!

தெல்லிப்பளை பகுதியில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள பனங்காணியொன்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கால்நடைகளை மேய்க்கச் சென்ற இளைஞர் ஒருவரே, இந்தச் சடலத்தைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சடலத்துக்கு அண்மையில் சாரம், செருப்புகள் என்பனவும் சிதறி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்....

வடக்கிலிருந்து 4000பேர் காலிக்கு!

காலியில் இடம்பெற இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் 4000இற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் இந்த மக்கள் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் மேதினத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் கிளிநொச்சியில் மாத்திரம் 1500 மக்கள் இந்நிகழ்வில்...

இலங்கையில் வேலையற்றோர் வீதம் அதிகரித்துள்ளது!

இலங்கையில் வேலையற்றோர் வீதம் கடந்த ஆண்டிலிருந்து அதிகரித்துவருகின்றது. அந்த வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையால் கோரப்பட்ட பணிய உதவியாளர் வெற்றிடத்திற்கு 250 பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வடக்கு மாகாணத்தில் பணியக உதவியாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக 40பேர் தேவைப்பட்டனர். இதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டபோது இப்பதவிக்கு 9,460பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 250 பேர் பட்டதாரிகளாவர்....
Loading posts...

All posts loaded

No more posts