வடக்கிலிருந்து 4000பேர் காலிக்கு!

காலியில் இடம்பெற இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் 4000இற்கு அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள் என சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கிலே யாழ்ப்பாணத்திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் இந்த மக்கள் எந்தவொரு எதிர்பார்ப்புமில்லாமல் மேதினத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள் எனவும் தெரிவித்த அவர் கிளிநொச்சியில் மாத்திரம் 1500 மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள இந்த மக்களுக்காக 80 பேரூந்துகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts