மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பா?

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மின்சார பாவனையார் சங்கம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்ததோடு தற்போது நான்காவது முறையாக மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. மேலும் சர்வதேச நாணய...

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட அனைத்து தரப்புக்களையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார். நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், புகலிடம் கோரி வெளிநாட்டில் குடும்பத்துடன்...
Ad Widget

சர்சைக்குரிய செனல் – 4 வீடியோ தொடர்பான முழு விபரம்!

பிரித்தானியாவின் சேனல் – 4 இலங்கை தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை நேற்று இரவு வெளியிட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் ஒளிபரப்பப்ட்ட குறித்த நிகழ்ச்சியில் பிள்ளையான் குழுவில் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா முக்கிய தகவல்களை முன்வைத்திருந்தார். ஆசாத் மௌலானா என்பவர் இந்த நாட்டில் நிதிக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி...

சிறையில் பரீட்சை எழுதும் மகன்..! தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை!

இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்த போதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட தந்தை, தான் இறப்பதற்கு முன் தன் மகனை பார்க்க உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என கண்ணீர் மல்க...

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் சற்று முன் ஆரம்பம்!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாக்கியுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) ஆரம்பமாக்கியுள்ளது. தொல்பொருள் துறை சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட...

உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: புடின் திட்டவட்டம்

தங்களது வேளாண் பொருள்களின் ஏற்றுமதியை மேற்கத்திய நாடுகள் அனுமதிக்காத வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா். உணவுப் பற்றாக்குறை நிலவி வரும் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் வழியாக தானியங்களைக் கொண்டு செல்வதற்கான அந்த ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக ரஷ்யா கடந்த ஜூலை மாதம்...

மது விருந்தில் கைக்கலப்பு; இளைஞர் உயிரிழப்பு!!

மதுவிருந்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் தாக்குதலுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு , கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்துள்ளனர். இந்நிகழ்வைத்...

யாழில். சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; நீதி கோரி நிற்கும் பெற்றோர்

யாழ். போதனா வைத்தியசாலையில், நேற்றைய தினம் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தின் பிரதிகளை வடமாகாண ஆளுநர் , மனிதவுரிமை...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுங்கள் – காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்

ஏனைய மனிதப்புதைகுழி விவகாரங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மெத்தனப்போக்கை விடுத்து, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் செவ்வாய்க்கிழமை (5) மீண்டும் ஆரம்பமாகின்றன. சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக...

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார். புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 57 வயதான ரெஸ்னிகோவ்,...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் போராட்டம்!!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட நிறைவில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ் மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த மனுவில், யாழ் மாவட்டத்தில்...

போதைப்பொருள் கடத்தலுக்காக மாற்றியமைத்த கெப் வாகனத்துடன் ஐவர் கைது!

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது, சந்தேகத்திற்கு...

பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் , அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்...

யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தம்!!

ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் , பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் இரு உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வந்த நிலையில் ஒருவர் சுகவீனம் காரணமாக விடுப்பில் உள்ளார்....

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமாகியது!!

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும்...

பேருந்து கட்டணமும் அதிரடியாக அதிகரிப்பு!!

நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து கட்டண திருத்தம்மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை...

QR முறை நீக்கப்பட்டுள்ளது- காஞ்சன விஜேசேகர!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசகதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை!!

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இறங்கு துறையின் கீழ் பகுதியில் இருக்கும் இரும்புகள் துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுவதனால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறங்கு துறை பகுதிக்கு மனித வலுவை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்று...
Loading posts...

All posts loaded

No more posts