கோப்பாயில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார்...

யாழில் தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு!!

நீர்வேலி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலியை சேர்ந்த கணேசரத்தினம் வேனுஜா (வயது 24) மற்றும் அவரது தயாரான கணேசரத்தினம் யோகேஸ்வரி (வயது 65) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த...
Ad Widget

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

முடக்கத்திற்கு தயாராகும் யாழ்ப்பாணம்!!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக் காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். இதனைத் தடுத்து நிறுத்தி மண்ணைப் பாதுகாக்க அனைவரும் அணிதிரளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் காணியை ஆக்கிரமிப்பதற்கு நில அளவைத் திணைக்களமும் அரச அதிகாரிகளும் வருகை...

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு ! – ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதேவேளை,பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் தொடர்பாக முன்னாள் சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை...

புடினின் சர்வதேச பிடியாணை தொடர்பில் பிரேசில் தகவல்!!

அடுத்த வருடம் பிரேசில் தலைநகரில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டால் அவர் கைதுசெய்யப்படமாட்டார் என பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புடினிற்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் புடினால் பிரச்சினைகள் இன்றி பிரேசில் வரமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்....

சரணடைந்தவர்களே கொக்குத்தொடுவாயில் புதைக்கப்பட்டுள்ளனர் : துரைராசா ரவிகரன்

கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் எனவும் பல உடலங்கள் இதில் மேலும் தென்படலாம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது ஆரம்பிக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் அவதானித்த...

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் 13 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு!

யாழ் நகரில் கடந்த 2 மாதங்களுக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை சூழல் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளிலேயே இவ்வாறு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக உரிமையாளர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கான காரணங்கள் எவை? மருத்துவர்கள் குழுவின் நிபுணத்துவ ஆலோசனையை கேட்டுள்ளது நீதிமன்று

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்கள் குழு சார்பில் மருத்துவ வல்லுநரின் ஆலோசனையை நீதிமன்றுக்கு முன்வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த கட்டளையை நேற்று வழங்கினார். காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச்...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு பயணத் தடை!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன்...

வீதிகளில் செல்வோரை மிரட்டி தொலைபேசி பறித்த பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!!

வீதியில் செல்வோரை மிரட்டி கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம்...

2ம் நாள் அகழ்வு பணிகளில் துப்பாக்கி சன்னங்கள், இரு மனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) நேற்று முன்தினம் வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (07) நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த இரண்டாம் நாள் அகழ்வுப்...

செம்மணி படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

செம்மணி படுகொலையின் 27ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (07.09.2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். செம்மணி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி உள்ளிட்டவர்களை நினைவு கூர்ந்து ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா...

யாழில் சிறுமிக்கு கை அகற்றப்பட்ட சம்பவம்: நீதி கோரும் ஆசிரியர் சங்கம்

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் சகல துறையிலும்...

உக்ரைனுக்கு சர்ச்சைக்குரிய குண்டுகளை வழங்கும் அமெரிக்கா: ரஷ்யா கடும் கண்டனம்

உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் திடீா் சுற்றுப் பயணமாக உக்ரைனுக்கு வருகைதந்த போது, யுரேனியச் சக்கையைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை உக்ரைனுக்கு அளிக்கவிருப்பதாக அவா் அறிவித்தாா். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு புதிதாக அளிக்கவிருக்கும் இராணுவ உதவிகளின்...

யாழ் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்; உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- சுகாதார அமைச்சு

யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை அகற்றப்பட்ட சம்பவம்தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய கருத்துத் தெரிவிக்கையில் ”இந்த விடயத்தில் வைத்தியர்கள் தவறிழைத்திருப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வைத்தியசாலை...

கை துண்டிக்கப்பட்ட வைசாலிக்கு நீதி வேண்டி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

கடந்தவாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டது. இந்த செயற்பாடு தாதியரின் அசமந்தப் போக்கு காரணமாகவே இடம்பெற்றது என்றும் இதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன், இந்த விடயம் இலங்கையின் நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி தற்போது யாழ்ப்பாணம்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்துக்கள் நுழைந்த புலனாய்வாளர்கள்!!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06)நேற்றையதினம் இடம்பெற்றிருந்தது. இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த...

வாக்னர் கூலிப்படையை பயங்கரவாத குழுவாக அறிவிக்க பிரித்தானியா அரசு திட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மறைமுக கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படும் வாக்னர் கூலிப்படையை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்போவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன், சிரியா, மாலி போன்ற நாடுகளில் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வாக்னர் கூலிப்படை மீது கொடூர கொலைகள், கைதிகளை சித்திரவதை செய்தல், சூறையாடுதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,...

விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக...
Loading posts...

All posts loaded

No more posts