2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவார் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில், வரவு – செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் இது இரண்டாவது வரவு – செலவு திட்டமாகும்.

இம்முறை வரவு – செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, வசதி குறைந்த மக்களுக்கு நிவாரண திட்டங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதிகள் என பல முன்மொழிவுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

Related Posts