யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்!!

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ்.மாவட்ட செயலகம் முன் இன்று (10) காலை 10.00 மணியளவில் ஒன்றுக்கூடிய கடற்தொழிலாளர்கள் , போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டத்தில் “இந்திய மீனவர்களே எமது கடல் வளங்களை அழிக்காதே, கடற்படையே அத்துமீறிய இந்திய மீனவர்களை கைது செய், கடற் தொழில் அமைச்சரே ஜனாதிபதியே எமது கோரிக்கைகளை நிறைவேற்று என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் யாழ் . மாவட்ட செயலகம் ஊடாக தமது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதிக்கான மகஜரை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் கையளித்தனர். இம் மகஜரின் பிரதிகளை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, மற்றும் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கவுள்ளதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Related Posts