- Saturday
- September 13th, 2025

வட- கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள்...

எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 361 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில்...

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கு கொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31.08.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த...

உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள்...

போக்குவரத்து விதிமீறலைத் தவிர்ப்பதற்காக 15,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் யாழ். மல்லாவி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் இலஞ்சம் பெறுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜேசிபி வகை இயந்திரத்தை செலுத்திய சாரதிக்கு அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதிப்பத்திரம்...

கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் விஷேட வழக்கு இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளில் அனைத்து திணைக்களங்களின் இணக்கத்துடன் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என...

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். காலியில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த சினோபெக் நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை நேற்று முதல் (30) ஆரம்பித்துள்ளது. () இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று முதல் Sinopec என பெயர் மாற்றப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 22 ஆம்...

உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் நான்கு இராணுவ விமானங்கள் சேதமடைந்துள்ளமை ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் சம்பவம் என தகவல் வெளியாகியுள்ளது. 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கியதாக கூறப்படுகின்றது. எஸ்டோனியா மற்றும் லாட்வியாவின் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த...

யாழில் ”யாழ் முயற்சியாளர் – 2023”என்ற விற்பனைக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியானது இன்றைய தினமும், நாளைய தினமும் யாழ்ப்பாணம், நல்லூர்,முத்திரைச்சந்தி அருகாமையில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கும் அவற்றிற்கான சந்தை வாய்ப்பை...

யாழ்.தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மாவா போதை பொருளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில்...

நல்லூர் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பைகளை வைத்திருந்த 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் நேற்றைய தினம் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 08 மாத கால பகுதியில், தடை செய்யப்பட்ட பொலித்தீன்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லூர்...

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும் , போதைக்கு அடிமையானவர்...

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி குறிப்பிட்டார். அதன்படி 40 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம்...

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழில் போராட்டம்!!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்குப் EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை (28) மதிய 12 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி...

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்கு சென்ற 8 வயது சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று முன்தினம் (27) மாலை 15...

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய...

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் எதிர்வரும் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஜனநாயக கூட்டமைப்பினர் முழு ஆதரவு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் அங்கப்பிரதிஷ்டை செய்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.08.2023) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 57 வயதுடைய சின்னையா சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புக்கான காரணம் மரண விசாரணையின் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30.08.2023) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது. "எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என தமிழ்...

All posts loaded
No more posts