செம்மணி புதைகுழி: தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவாக இருக்கலாம் என அறிக்கை

செம்மணி புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு என்பன காரணமாக இருந்திருக்கலாம் என்றும், இந்த புதைகுழியானது முறையான இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன என்பதற்கான சில குறிப்பிடத்தக்க ஆதாரங்களைக் கொண்டுள்ளது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில்...

டெலிகிராம் ஊடாக ஒரு கோடிக்கும் அதிகமான பண மோசடி – ஒருவர் கைது

இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகு கைது செய்துள்ளது. டெலிகிராம் (Telegram) செயலி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழியில் வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி 12,691,033 ரூபாயை மோசடி செய்தமை...
Ad Widget

இன்றும் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கீழ் மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு பிரதேசமாக உருவாகும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தொகுப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களில் மழையின் அளவு இன்று (21) முதல் வரவிருக்கும் நாட்களில் அதிகரிக்கக்...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்கும் வரை ஹோர்முஸ் திறக்கப்படாது – ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை அதனைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள்...

நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணி நேர மின் துண்டிப்பு

மின்சாரத் தேவையை முகாமை செய்வதற்காக நாட்டின் 4 வலயங்களில் இன்றைய தினமும் (21) மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஒவ்வொரு வலயத்திற்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் ஜயநாத்...

அரியாலையில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு!

அரியாலை பகுதியில் உள்ள காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து நீர் இறைத்தபோது, கிணற்றுக்குள் இருந்த சாக்குமூட்டைகளில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் நேற்று (20) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மூட்டைகளை வெளியே எடுத்துச் சோதனையிட்டபோது, அவற்றுக்குள் பெருமளவிலான துப்பாக்கி ரவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து யாழ்ப்பாணத் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளது....

190 சிறுவர்கள் பட்டினிப் போட்டுக் கொலை: கென்ய போதகர் குற்றவாளி என தீர்ப்பு

கென்யாவில் "கடவுளை சந்திக்க வேண்டும்" எனக் கூறி, சிறுவர்கள் உட்பட 191 பேரை பட்டினி போட்டுப் படுகொலை செய்த Doomsday என்ற வழிபாட்டுப் பிரிவின் தலைவர் போல் மெக்கன்சி (Paul Mackenzie) மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேர் குற்றவாளிகளாக மொம்பாசா உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு Good News International Ministries...

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை!

போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ​போர்த்துகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்தத் தடையை உறுதி செய்ததுடன், அவருக்கு 255 யூரோ அபராதமும் விதித்துள்ளது. 41 வயதான ரொனால்டோ, பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடனான கருத்து...

அதிகார மமதையும் அரசியல் பழிவாங்கலும்: சீமான் கண்டனம்

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நா.த.க வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மற்றும் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சஞ்சய்காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல்...

லிட்ரோ நிறுவனம் வௌியிட்ட புதிய அறிவிப்பு!!

நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்ததுடன், அந்த எரிவாயுத் தொகுதியை தரை இறக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 3,900 மெற்றிக் டன்...

ஜி.எல். பீரிஸ் வௌியேறினார்!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுமார் இரண்டு மணித்தியால வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) வேலைவாய்ப்பு!!

இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) காலியாகவுள்ள திறந்த போட்டி மூலமான நியமனங்களுக்காகத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள் மற்றும் அவற்றின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: 1. முகாமைத்துவ உதவியாளர் - தரம் III (Management Assistant - Grade III) வெற்றிடங்கள்:...

வீதியில் யார் சரி என்பதை நிரூபிப்பதைவிட, அனைவரும் உயிருடன் வீடு திரும்புவதே முக்கியம்!!

வீதியில் யார் சரி என்பதை நிரூபிப்பதைவிட, அனைவரும் உயிருடன் வீடு திரும்புவதே முக்கியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தின் மன்னார் மாவட்ட நிலையமும்...

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப்

பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், குடியேற்றம் குறித்த தனது ஆலோசனையை ஐரோப்பிய ஜனாதிபதி மக்ரோன் செவிமடுத்திருந்தால் இந்தக் கலவரங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். பாரிஸ் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது,...

3,500 ட்ரோன்களுடன் உலக கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட காட்சி

இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவில் வானத்தை ஒளிரச் செய்யும் பிரம்மாண்டமான ட்ரோன் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மைசூர் பண்ணிமண்டபம் தீப்பந்த அணிவகுப்பு மைதானம் இடம்பெற்று வருகின்ற தசரா திருவிழாவில் , சாதனை அளவாக 3,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, இரவு வானில் கண்கவர் ஒளிரும் காட்சிகளை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த கண்கவர்...

137 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70% வரை குறைக்க நடவடிக்கை!!

புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு மேலும் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 137 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார சபை தேர்வு செய்யப்பட்ட இந்த மருந்துகளின் வர்த்தக இலாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த...

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இச் சேவையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...

டக்ளஸின் அலுவலகத்தில் தேடுதல்!!

யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறையினர்...

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை!!

சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இருவருக்கும் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நஸீருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர்...
Loading posts...

All posts loaded

No more posts