3,500 ட்ரோன்களுடன் உலக கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட காட்சி

இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவில் வானத்தை ஒளிரச் செய்யும் பிரம்மாண்டமான ட்ரோன் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மைசூர் பண்ணிமண்டபம் தீப்பந்த அணிவகுப்பு மைதானம் இடம்பெற்று வருகின்ற தசரா திருவிழாவில் , சாதனை அளவாக 3,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, இரவு வானில் கண்கவர் ஒளிரும் காட்சிகளை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்கவர் ட்ரோன் காட்சி அக்டோபர் 17, 18, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் இரவு 8:00 மணிக்கு நடைபெறுகிறது.

வானில் சாமுண்டீஸ்வரி அம்மன், பிரம்மாண்டமான மயில் கின்னஸ் சாதனை, சிங்கம் மற்றும் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானை போன்ற வடிவங்கள் ட்ரோன்கள் மூலம் வானத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன.

மைதானத்தின் உள்ளே அமர்ந்து பார்க்க அதிகாரப்பூர்வ மைசூர் தசரா இணையதளத்தில் அனுமதிக்கு கட்டணம் அறவிடப்படுவதோடு . அனுமதிச் சீட்டின்றி பண்ணிமண்டபத்தைச் சுற்றியுள்ள திறந்தவெளிப் பகுதிகளிலிருந்தும் இந்த வான வேடிக்கையைக் காண முடியும்

Related Posts