தனியார் மருத்துவமனை தாதி கடத்திக் படுகொலை: கணவன் மருத்துவமனையில் உயிரை மாய்க்க முயற்சி!

இந்தியாவின் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில், தனியார் வைத்தியசாலையொன்றில் தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவர் காட்டுப்பகுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊத்துக்குளி – பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் 26 வயதுடைய குறித்த பெண், கட்டடத் தொழிலாளியாக கடமையாற்றிவரும் தமது கணவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி வழக்கம்போல் பணிக்குச் சென்ற தாதியை, வேலை முடிந்ததும் அழைத்து வருவதற்காக அவரது கணவர் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

எனினும், அவர் ஏற்கனவே வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் வீடு வந்து சேராததால், கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய தேடுதலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடிப் பகுதிக்குட்பட்ட காட்டுக்குள் முட்புதருக்குள் குறித்த பெண் தாதியின் உடல், சில நாட்களின் பின்னர் உரு குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வைத்தியசாலைக்குச் சென்று தனது மனைவியின் சடலத்தைக் கண்டு கதறியழுத கணவர், அங்கு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றமையும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய தாதியை மர்மநபர்கள் வழிமறித்துக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசிச் சென்றுள்மை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காகப் பொலிஸார் குழுவொன்றை அமைத்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts