மீண்டும் இணையும் சிம்பு – நயன்தாரா?

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தாயராகி வருகின்றன. அதில் சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் ஒன்று. நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டமான பக்தி படமாக இப்படம் இருக்கும் என்பதை அப்படத்தின் டிரெய்லர் உறுதிப்படுத்தி உள்ளது. இதனிடையே, வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு...

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகர் காலமானார்: குடும்பத்தினருடன் நேரில் அஞ்சலி!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகர், வயது மூப்பு காரணமாக இன்று (30) காலமானார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், விஜய்யின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரின் மூத்த சகோதரரின்...
Ad Widget

பாணின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!!

450 கிராம் எடையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலையை இன்று (30) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

மழைக்காலத்தில் நீர்நிலைகள் குறித்து மிகுந்த அவதானம் தேவை!

ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி , யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி...

விஜய்யின் பாணியில் தனுஷின் ‘அரசியல்’ நகர்வு!

நடிகர் தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைக்க இருப்பதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் விதமாக மாணவர்களை குறிவைத்து அவர் முன்னெடுப்புகளை எடுத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாகத் தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்...

இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணி...

தாயகம் திரும்பியபோது கைதானவர் பிணையில் விடுவிப்பு!

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நபர், நேற்று (29) யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார். கடந்த 26ஆம்...

பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு!!

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (30) அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அனைத்து அரசுப் பல்கலைக்கழக அமைப்புகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார். அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை, ஊழியர்கள் மீதான அதிக பணிச்சுமை, போதுமான...

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள 86 ஆம் இலக்கக் கட்டளையை மீறி, நுகர்வோருக்குத் தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை வழங்காமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ்வழக்கு புதுக்கடை இலக்கம் 5...

10 லட்சம் தேசிய அடையாள அட்டைகள், 6.5 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடுவதில் சிக்கல்!

நீண்ட காலமாக நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக, 2017 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. 12 இலக்கங்களைக் கொண்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்ட அந்தப் பிளாஸ்டிக் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உற்பத்திச் செலவைக் குறைப்பதாகும். இருப்பினும், குறித்த பிளாஸ்டிக் கார்டுகளுக்கு...

“நான் ChatGPT-யைத்தான் காதலிக்கிறேன்!” – நடிகை வனிதா விஜயகுமார் பரபரப்பு பேச்சு!

“நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது.எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது." என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார். மங்கி மைண்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவகுமார் தயாரித்து, ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாக நடித்துள்ள புதிய படம், 'லவ் 3.0'. முழுக்க முழுக்க இன்ஸ்டா பிரபலங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த...

மும்பையின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து லசித் மாலிங்க விலகல்!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன அண்மையில் விலகினார். அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்து 3 பேர் பரஸ்பர சம்மதத்துடன்...

2027 பொங்கலுக்கு வரும் அஜித் படம்!

அஜித் தமிழ் சினிமாவின் தல என ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். அவர் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னாலும் ரசிகர்கள் விடுவதாக இல்லை, இன்றும் அவர் படத்தின் டீசர் வெளிவந்தால் கூட திரையரங்குகளில் அதை பார்க்க கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் அஜித் கார் ரேஸ் மீது தான் முழுகவனத்தையும்...

நாமல் ராஜபக்ஷவின் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் சட்டவிரோதமாக ஈட்டிய 15 மில்லியன் ரூபாயை தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்ததன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து இதுவரை சட்டமா அதிபரிடமிருந்து ஆலோசனைகள் கிடைக்கப்பெறவில்லை என...

மோசடி முதலீடுகளில் ஏமாறாதீர்கள்! – மத்திய வங்கி எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியினால் தடைசெய்யப்பட்டுள்ள பிரமிட் திட்டங்களின் பட்டியலில் Max App Media Ltd. மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்த்துள்ளதையடுத்து, அப்பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், Max App Media Ltd., அதன் இணை நிறுவனங்களான Max...

மனித தவறால் நேர்ந்த பேரழிவு: ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி 68 பேர் பலி!

ஸ்பெயி​னில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்​றோடொன்று மோதி ஏற்​பட்ட பயங்​கர விபத்​தில் 68 பேர் உயிரிழந்​துள்​ளதுடன் 179-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ள​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று அஞ்​சப்​படு​கிறது. சிக்​னல் அமைப்​பில் ஏற்​பட்ட கோளாறைச் சரி செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த ஊழியர் ஒரு​வர் எச்​சரிக்கை...

ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சருக்கு இந்தியா அழைப்பு!

புது டெல்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) முதல் ‘நாகரிகங்களுக்கிடையிலான உரையாடல் மன்றத்திற்கு’ (Civilisational Dialogue Forum), பாகிஸ்தானின் தேசிய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஔரங்கசீப் கான் கிச்சியை (Aurangzeb Khan Khichi) இந்தியா அழைத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த மன்றத்திற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு...

நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கல் நிலையில் தினமும் தடைப்படும் போக்குவரத்து!!

யாழ்ப்பாணம் , குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளமையால் , நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நெடுந்தாரகை மற்றும் வடதாரகை என்பன ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் , குமுதினி படகு...

நீதிமன்றில் தன்னுயிரை மாய்க்க முயன்ற கைதி!!

திருகோணமலை நீதவான் நீதிமன்ற வளாகத்தில், புதன்கிழமை (28) அன்று சந்தேகநபரொருவர் கூர்மையான சிறு ஆயுதத்தால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டதில் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இச்சம்பவத்தின் போது தடுக்க முற்பட்ட மேலும் இருவரும் லேசான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

‘கிட்ஃப்ளூயன்சிங்’ கலாச்சாரத்திற்குத் தடை? குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை!

இணைய பிரபலத்திற்காகவோ, வணிக லாபத்திற்காகவோ குழந்தைகளைப் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், இலங்கை அரசு புதிய வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையுடன் (NCPA) இணைந்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு இந்த வழிகாட்டுதல்களை இறுதி செய்துள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நிபுணர்கள் குழுவினால் வரைவு செய்யப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts