இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) காலியாகவுள்ள திறந்த போட்டி மூலமான நியமனங்களுக்காகத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள் மற்றும் அவற்றின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:
1. முகாமைத்துவ உதவியாளர் – தரம் III (Management Assistant – Grade III)
-
வெற்றிடங்கள்: 55
-
வயது எல்லை: 21 – 35 வயதிற்குட்பட்டவர்கள்
-
ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 46,220/-
-
அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், மொழி உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (ஒரு அமர்வில்) சித்தியடைந்திருத்தல்.
-
மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Management Assistant Vacancy Details
2. அலுவலகப் உதவியாளர் – தரம் III (Office Employee Assistant – Grade III)
-
வெற்றிடங்கள்: 85
-
வயது எல்லை: 21 – 32 வயதிற்குட்பட்டவர்கள்
-
ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 40,500/-
-
அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
-
மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Office Employee Assistant Vacancy Details
3. ஓட்டுநர் / சாரதி – தரம் III (Driver – Grade III)
-
வெற்றிடங்கள்: 46
-
வயது எல்லை: 25 – 45 வயதிற்குட்பட்டவர்கள்
-
ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 43,280/-
-
அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் (மொழி உட்பட) 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல், கனரக வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் கொண்டிருத்தல் மற்றும் 3 வருட அனுபவம்.
-
மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Driver Recruitment Details