யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (Registrar) பதவிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவி முழுநேர அலுவலர் பதவியாகும். இப்பதவிக்கான கல்வித் தகைமைகள், உரிய நிர்வாக அனுபவம் பற்றிய தேவைப்பாடுகள், பதவிக்கான சம்பள விபரங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் (https://jfn.ac.lk/post-of-registrar/).

விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் உரிய விண்ணப்பப் படிவத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.jfn.ac.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,000 செலுத்தப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சான்றிதழ்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளையும், கட்டணம் செலுத்தியதற்கான ஆதாரத்தையும் இணைத்து, பிரதிப் பதிவாளர், தாபனங்கள் கிளை (கல்விசாரா), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 ஒக்டோபர் 30ஆம் திகதி ஆகும்.
மேலதிக விபரங்களுக்கு 021 222 8566 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அல்லது jobs@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரியையுடன் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts