- Tuesday
- October 20th, 2026
கென்யாவில் "கடவுளை சந்திக்க வேண்டும்" எனக் கூறி, சிறுவர்கள் உட்பட 191 பேரை பட்டினி போட்டுப் படுகொலை செய்த Doomsday என்ற வழிபாட்டுப் பிரிவின் தலைவர் போல் மெக்கன்சி (Paul Mackenzie) மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேர் குற்றவாளிகளாக மொம்பாசா உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு Good News International Ministries...
போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் முகாமிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய விவகாரத்தில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்த்துகல் கால்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இந்தத் தடையை உறுதி செய்ததுடன், அவருக்கு 255 யூரோ அபராதமும் விதித்துள்ளது. 41 வயதான ரொனால்டோ, பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸுடனான கருத்து...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் நா.த.க வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா மற்றும் தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் சஞ்சய்காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல்...
நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. 3,900 மெற்றிக் டன் எரிவாயுவை ஏற்றிவந்த 'FRANCOIS' கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்ததுடன், அந்த எரிவாயுத் தொகுதியை தரை இறக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 3,900 மெற்றிக் டன்...
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுமார் இரண்டு மணித்தியால வாக்குமூலப் பதிவின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே, முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) காலியாகவுள்ள திறந்த போட்டி மூலமான நியமனங்களுக்காகத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள் மற்றும் அவற்றின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு: 1. முகாமைத்துவ உதவியாளர் - தரம் III (Management Assistant - Grade III) வெற்றிடங்கள்:...
வீதியில் யார் சரி என்பதை நிரூபிப்பதைவிட, அனைவரும் உயிருடன் வீடு திரும்புவதே முக்கியம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தின் மன்னார் மாவட்ட நிலையமும்...
பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், குடியேற்றம் குறித்த தனது ஆலோசனையை ஐரோப்பிய ஜனாதிபதி மக்ரோன் செவிமடுத்திருந்தால் இந்தக் கலவரங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். பாரிஸ் மிக விரைவில் ஒரு முஸ்லிம் நகரமாக மாறப்போகிறது,...
இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவில் வானத்தை ஒளிரச் செய்யும் பிரம்மாண்டமான ட்ரோன் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மைசூர் பண்ணிமண்டபம் தீப்பந்த அணிவகுப்பு மைதானம் இடம்பெற்று வருகின்ற தசரா திருவிழாவில் , சாதனை அளவாக 3,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு, இரவு வானில் கண்கவர் ஒளிரும் காட்சிகளை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த கண்கவர்...
புற்றுநோய் சிகிச்சையை நோயாளிகளுக்கு மேலும் எளிய முறையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 137 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70 சதவீதம் வரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருந்து விலை நிர்ணய அதிகார சபை தேர்வு செய்யப்பட்ட இந்த மருந்துகளின் வர்த்தக இலாப வரம்பை 30 சதவீதமாகக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் சேவையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அ. கிருபாகரன் தலைமையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இச் சேவையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்...
யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்ததாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், யாழ். நீதிமன்றத்தில் தேடுதல் ஆணையைப் பெற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் குற்றப் புலனாய்வுத் துறையினர்...
சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இருவருக்கும் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில் நஸீருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர்...
ஜெயிலர் 2 வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் புதிய திரைப்படம் குறித்த அப்டேட் இணையத்தில் உலா வருகிறது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் 2 உலகளவில்...
இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் காரணமாக, இன்று (20) மாலை முதல் நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும்...
ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக 'பார்ஸ்' (Fars) செய்திச் சேவையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பிரதிநிதி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். "நாங்கள் போர் ஏற்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. இம்முறை எங்களின் பதிலடி மிகக்...
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் செயலிழந்தமை காரணமாக, இன்றைய தினத்திலும் (20) நாடளாவிய ரீதியில் மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (National System Operator) நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) தெரிவித்தது. இதன்படி, இன்றைய தினமும் மாலை 4.30...
பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார். அவரது உடல் பூரண அரச மரியாதையுடன் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான சக்கரமல்லூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் (37) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்...
முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (20) காலை இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும்...
