நட்சத்திர நடிகர்களின் படங்கள் இல்லாவிட்டாலும் சூடுபிடிக்கும் தீபாவளி ரேஸ்!!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது முன்னணி நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் களத்தில் இல்லை. அதனால் போட்டி குறைந்துவிடுமா என்றால், அதுதான் இல்லை. புதுப்புது கதைகளுடன் நான்கு தமிழ்ப் படங்களும், பிரமாண்ட எதிர்பார்ப்புடன் இந்திப் படமான 'ராமாயணா'வும் களமிறங்குவதால்...

யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்ட கியூபா தூதுவர்!

இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) அவர்கள், நேற்று (15) யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு விஜயம் செய்து, அதன் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர்பில் பார்வையிட்டார். இவ்விஜயத்தின்போது, யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்று மரபுகள், அதன் தொல்லியல் முக்கியத்துவம் மற்றும்...
Ad Widget

வலிகாமம் வடக்கில் புதிய மதுபானசாலைக்குத் தடை கோரி பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம்!

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றைத் திறப்பதற்கான அனுமதியைத் தடுக்குமாறு கோரும் தீர்மானம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அமர்வு இன்று (16) சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமாரன் விஜயராஜ் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத்...

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் சீராகும்: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் முழுமையாகச் சீரடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதமே இந்நிலைமைக்குக் காரணம் எனத் தெரிவித்த அந்நிறுவனத்தின்...

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கிரிஷ் (Krrish) நிறுவனத்தின் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரான ஜானகி சிறிவர்தன தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்துள்ளார்....

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருக்க பௌத்த பிக்குகளுக்குத் தடை: நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே தொடர்ந்து...

தையிட்டி விகாரை பகுதியில் சட்டவிரோதக் கட்டுமானங்களைப் பார்வையிடச் சென்ற தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைத் தடுத்த பொலிசார்

தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விகாரை பகுதிக்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் சோ.கீர்த்தன் தலைமையில் நடைபெற்றது. அதன்...

400 குடும்பங்களைத் தத்தெடுத்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா!!

நடிகை ராஷ்மிகா மந்தனா 400 குடும்பங்களைத் தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அடுத்த 1 ஆண்டு முழுவதும் ஒவ்வொரு 3 மாதங்களுக்கான மளிகைப் பொருட்கள் செலவை ஏற்பதாகவும் அறிவித்துள்ளார். மற்றவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா...

ஹோர்முஸ் நீரிணையில் மூழ்கிய கப்பல் – கடலில் மிதக்கும் ஐபோன்கள்

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணி வெடிகள் வெடித்ததில் சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் கொள்கலன்களில் இருந்த ஐபோன்கள், விலையுயர்ந்த வாசனை திரவிய போத்தல்கள் கடலில் மிதக்கின்றன. இதுபற்றி அறிந்தவர்கள் படகில் சென்று ஐபோன்கள், வாசனை திரவியங்களை மொத்தமாக அள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஈரானுக்கும்...

விளையாட்டு அரங்கிற்காக ஒதுக்கப்பட்ட காணி ஏன் மாற்றப்பட்டது? பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் கேள்வி

யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு ஏற்கனவே செம்மணி பகுதியில் ஒதுக்கப்பட்ட காணி, பின்னர் எதன் அடிப்படையில் மாற்றப்பட்டது என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண...

பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 3 சிறுவர்கள், ஆசிரியர் பலி!

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் 16 வயது சிறுவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறுவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்தனர். வியாழக்கிழமை பிற்பகல் பெண்ட் நகரில் உள்ள சில்வர் ரெயில் ஆரம்ப பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்த குறித்த சிறுவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5, 8 மற்றும் 11...

யேமன் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்

யேமன் நாட்டின் தற்போதைய தலைநகரான ஏடன் (Aden) நகரில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வளாகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் என யேமன் சுகாதார அமைச்சர் காசிம் புஹைபே (Qasim Buhaibeh) உறுதிப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்களும் சிவில் ஊழியர்களுமே...

யாழ்ப்பாணத்தில் ரூ. 8.5 கோடிக்கும் அதிக சொத்துக்கள், பணம் முடக்கம்!

போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. பணச்சலவை...

இந்திய வங்கியின் (Indian Bank) கொழும்பு கிளையில் வேலைவாய்ப்பு

இந்திய வங்கியின் கொழும்பு கிளைக்கான வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் Banking Assistant மற்றும் Assistant Manager ஆகிய இரண்டு பதவி நிலைகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கோரப்படுகிறார்கள். 1. Banking Assistant: சம்பளம் (தோராயமாக): LKR 120,000/- (பதவிக்காலச் சோதனைக் காலத்திற்குப் பின்) தகுதிகள்: இலங்கை குடியுரிமை பெற்றிருத்தல், க.பொ.த (சா/த) பரீட்சையில் ஆங்கிலம் மற்றும் கணித...