கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (16) வெள்ளிக்கிழமை நீதிமன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
வியாழக்கிழமை (15) மாலை ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பல பிக்குகள் இரவு முழுவதும் அப்பகுதியில் தங்கியிருந்தனர்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்புறத்தில், காலி வீதியின் மறுபக்க நடைபாதையில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.