- Friday
- October 2nd, 2026
இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக உயர்தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார். விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தவை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில், பசுமைக்குடில் விவசாயம் மற்றும் நவீன ஸ்மாநேற்றையர்ட் விவசாயம் (Smart Agriculture) குறித்து...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது அத்துடன், அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடியில் மோதி வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பனாமா கொடியுடன் கூடிய 'El Gaia' என்ற இந்த எண்ணெய்க் கப்பல், தெற்கு கடற்பாதை வழியே பயணித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு கடல் கண்ணி வெடியில் மோதியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்துடன் முழு கப்பலும் தீப்பற்றி...
லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் 11 ஆயிரம் கோடி இந்திய ரூபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டன. இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்து, லண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும்...
தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கையெழுத்தாகியுள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித...
ஜாவா கடற்பரப்பில் வார இறுதியில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போன 129 பேரை 600-க்கும் மேற்பட்ட இந்தோனேசிய மீட்புக் குழுவினர் தேடி வருவதாக திங்களன்று (13) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாகவே நீடிக்கிறது. கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குச் சென்று கொண்டிருந்த ‘விர்கோ டிரான்ஸ்போர்ட்...
விஜய், அஜித் 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆண்ட உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் இருவருமே தற்போது மிக நெருங்கிய நண்பர்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்துவிட்டனர். அதிலும் அஜித்தின் கார் ரேஸ் போட்டியில் விஜய் ஓடி வந்து அஜித்தை கட்டி பிடித்தது எல்லோருக்கும் செம மொமண்ட் ஆக அமைந்தது. இந்நிலையில் கார் ரேஸிற்காக டி.வி.கே ஆட்சியில்...
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் இனப்படுகொலைக்கான சான்றுப்பொருட்களாக காணப்படுகின்ற நிலையில் தமிழனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணைப்பொறிமுறையொன்று தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என்று கிட்டு பூங்காவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொதுமக்களும் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை...
நாட்டில் நிலவி வரும் கடுமையான வறட்சியான வானிலையைக் கருத்திற்கொண்டு, யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் பிரிவுகள் இன்று (14) திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2...
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இன்று (14) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நேற்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின்...
தனியார் நீண்ட தூர ஜெட் விமானம் ஒன்றைச் சொந்தமாக வைத்துள்ள முதலாவது இலங்கையரான கலாநிதி ரோஷ் ஜலகே (Dr. Rosh Jalagge), தனது ஜெட் விமானத்தில் நேற்று (13) ரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்தார். கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் கல்வியைப் பயின்றுள்ள ரோஷ் ஜலகே, தற்போது அவுஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல தொழில்களைச்...
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கின் விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத்...
உலக சந்தையில் மீண்டும் இன்றைய தினம் (14) இரண்டு சதவீதத்திற்கும் அதிகமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்று மூடப்பட்டமை, சவூதி அரேபியா மீதான புதிய ஹூதி தாக்குதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் கப்பல்கள் மீதான ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக இவ்வாறு சடுதியாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பை...
ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு போர் ஓர் காரணமல்லவெனவும், மாறாக உக்ரைன் - ரஷ்ய போரே காரணம் எனவும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உக்ரைனின்...
டுபாயில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக கிண்ணத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இருப்பினும், போட்டியின் முடிவில் ஆசியக் கிரிக்கெட் சபையின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோஷின் நக்வியிடமிருந்து கிண்ணத்தைப் பெற இந்திய...
சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது...
கடந்த ஆகஸ்ட் மாதம், உலகின் சராசரி புவி வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்து, மனித வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற மையம் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் சராசரி புவி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை...
வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன....
நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில் ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட...
Loading posts...
All posts loaded
No more posts
