- Thursday
- October 1st, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் இணையவழி (Online) ஊடாக சாட்சியமளிப்பதற்காகவே அவர் நீதிமன்றத்தில்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவும்,...
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka - CBSL), ஒப்பந்த அடிப்படையில் RED Team Specialist பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது. பதவி விவரங்கள்: பதவியின் பெயர்: RED Team Specialist (On Contract Basis) வேலைப்பணி: சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய அச்சுறுத்தல்களைக் கண்டறிதல்...
நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்டமைக்கு அரசாங்கம் காரணமில்லை என்றால் , அவ்விடத்தில் சட்ட ரீதியாக சிலையை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூரில் தியாக தீபத்தின் சிலை அகற்றப்பட்ட விடயத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். அது...
சீன நடிகர் ஜாக்கி சான் (Jackie Chan) காலமானதாகக் கூறும் தொடர்ச்சியான பதிவுகள் சமூக ஊடகங்களில் திடீரெனப் பரவி வருகின்றன. இந்தப் பதிவுகள் பொய்யானவை; 72 வயதான அந்த நடிகர் உயிருடன் இருக்கிறார். ஃபாங் ஷிலோங் (Fang Shilong) என்ற உண்மையான பெயர் கொண்ட ஜாக்கி சான் உலகளாவிய புகழைப் பெற்றுள்ளார். இதனால் அவர் எந்தவொரு...
போக்குவரத்து தவறுகள் தொடர்பாக சாரதிகளின் புள்ளிகளைக் குறைக்கும் முறைமையின் 6 மாத முன்னோடித் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் நேற்று (28) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் ஆண்டின் மார்ச்...
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான 'கிரிஷ்' நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி மோசடி மற்றும் இலஞ்சம் பெற்றமை ஆகிய...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவத்தைக் கண்டித்தும், அகற்றிய சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் வடக்கு, கிழக்கின் பல இடங்களில் திங்கட்கிழமை (28) கவனயீர்ப்புப் போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. தியாக தீபம் திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, நல்லூர்...
MGR biopic film ஆக உருவாகும் ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ திரைப்படத்தில், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இவர் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர். நடிப்பு, அரசியல், மக்கள் சேவை ஆகிய தளங்களில் தனித்துவமான வரலாற்றை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், அ.தி.மு.க. என்ற...
தமிழ் சினிமாவில் 80 களில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் கங்கை அமரன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், வெங்கட் பிரபுவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது, நன்றாக யோசிக்கிறார், படம் பண்ணுகிறார். வேறொரு படத்தை நம்பியிருந்தார், அந்தப் படம் கைகூடாத காரணத்தால் அவரது புதுப்படம் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தாமதத்திற்கு காரணமான நடிகர் யார் என்பது...
ஈரானுக்கு எதிரான இராணுவ மற்றும் பொருளாதார மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும், இதன் மூலம் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை குறைய கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் ஈரான் சரணடையும், அந்நாடு சரணடைந்த உடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அமெரிக்க ஜனாதிபதி...
காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000 ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த நோயை கட்டுப்படுத்த தேவையான சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையாக காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள 17 ஆவது மற்றும் மிகக் கடுமையான எபோலா பாதிப்பாகும். அறிய வகை 'புண்டிபுக்யோ' (Bundibugyo) வைரஸால் ஏற்படும்...
அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தங்களது பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், எரிபொருள் விநியோகப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக இலங்கை பெட்ரோலிய தனியார் டேங்கர் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை (28.09.2026) தங்களது பிரச்சினை தொடர்பாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜெ. ராஜகருணாவுடன் நடத்திய கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் ஏ. எம்....
பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யும்போது, விண்ணப்பதாரர்களின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை மிகவும் துல்லியமாகச் சரிபார்க்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பிரதி பரீட்சைகள் ஆணையாளர் சின்னதம்பி பிரகாசன் இது குறித்து தெரிவிக்கையில் - தற்போது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்தி, மாணவர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், பாலினம் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட...
தென்னாபிரிக்காவின் முக்கிய நகரங்களான ஜோகார்னஸ்பேக் மற்றும் கேப் டவுன் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகளில் சில மணிநேர இடைவெளியில் இடம்பெற்ற இரு கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜோகார்னஸ்பேக்கிற்கு மேற்கே உள்ள வெடேலா நகரப் பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஏகே-47...
உலக சந்தையில் எரிபொருள் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகின்ற நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பை ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீது சுமத்தபோவதில்லை. எரிபொருள் நிவாரணத்துக்காக எதிர்வரும் மூன்று மாதகாலத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் எடுத்துச் சென்றமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த நிறைவிடத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திலீபனின் நினைவிடத்தில் அவரது நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15...
திலீபனின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தென்னிலங்கை மற்றும் வடக்கிலுள்ள ஒரு சில அரசியல்வாதிகள்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 15,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக திருவனந்தபுரத்தில்...
மாதம்பை - குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய - வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண்...
Loading posts...
All posts loaded
No more posts
