- Thursday
- June 25th, 2026
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும்...
தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனைத் தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண ஆளுநரால்...
பி.வி. நந்தினி ரெட்டி இயக்கிய "மா இன்டி பங்காரம்" எனும் தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து, பெரும் வரவேற்பையும் பாக்ஸ் ஆபீஸ் வசூலையும் அள்ளினார். இப்படித்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் உலகளவில் ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாவை கடந்தது. இந்நிலையில் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்...
வெனிசுவேலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் பாரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இவாத்தேவின் வடக்கு பகுதிக்கு அப்பால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது...
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...
நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய சிலரால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து வெவ்வேறு...
கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த...
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று புதன்கிழமை (24) இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை செய்திகள் இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள்...
அட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலிஎல பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய காவிந்த்யா பவனி என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளதாக அவரது தாயாரால் கடந்த 2026.03.06 அன்று அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அட்டம்பிட்டிய பொலிஸார் வெலிமடை நீதவான் நீதிமன்றத்திற்கு விபரங்களை சமர்ப்பித்துள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகளுக்காக தற்போது பொதுமக்களின்...
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார கசல்பார்த் அவர்களிடம் மட்டு ஊடக அமையத்தில் வைத்து ஊடகவியலாளர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மட்டு ஊடக அமையத்திற்கு விஜயம் செய்த ஜேர்மன் துணை தூதுவருக்கும் மட்டு...
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள்...
உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. இதற்கிடையில்,...
தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தலைநகர் கராகஸில் (Caracas) உள்ள பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இடிந்து விழுந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தரவுகளின்படி, நேற்றையதினம் (24) இரவு 10.04 மணியளவில் முதலாவது நிலநடுக்கம் ரிக்டர்...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026 பிஃபா உலகக் கிண்ணத்தின் 'குரூப் ஏ' பிரிவின் இறுதி லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த செக் குடியரசு அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்ஸிகோ வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக தனது பிரிவில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்று (Perfect Group...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் காப்பகங்களாக முக்கிய மையங்களாக விளங்கும் காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ச்சியாக தன்னுடைய பொறுப்பற்றதன்மையினையும் அணுகுமுறையினையும் வெளிப்படுத்திவருவது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இது மிகுந்த கவலையளிக்கும் விடயம். கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ...
இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது...
