2027 முதல் தரம் 1 மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்

பாடசாலைகளில் தரம் 1 மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் புதிய சுற்றறிக்கையை 2027 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கல்வியில் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய வடிவமைப்பு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,...

மகிழ்ச்சியில் ”எங்கள் தங்கம்” படக்குழு!!

நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள "மா இன்ட்டி பங்காரம்" படம் கடந்த வாரம் வெளியானது. தமிழிலும் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப்பங்கி ஆகி வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் முதல் வார இறுதியில் இப்படம் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலித்து லாபத்தை ஆரம்பித்துவிட்டது. கதாநாயகி ஒருவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து...
Ad Widget

டெங்கு அதி அவதான வலயங்களின் பட்டியல்!!

நாடு முழுவதும் நிலவும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டு, அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையின்படி, மேல் மாகாணமே அதிகளவான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பெரும்பாலான...

முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்காத திரிஷா, ரஜினி !!!

விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று (22) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துவிட்டார். அவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின்...

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு- சிறைத்தண்டனை உறுதி

இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை...

பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஓய்வுபெற்ற அதிபர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

கிளிநொச்சி, ஏ - 9 பிரதான வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் பெருமாள் கணேசன் என்பவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான அதிபர் வழமை போன்று தனது மாலை நேர நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்கு...

தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு!!

வடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு 25.06.2026 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைவாக, பின்வரும் பதவிகளுக்காகத் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்: சிவில் பொறியியலாளர் - 10 வெற்றிடங்கள்...

மத வழிபாட்டு தலங்களிடம் யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள கோரிக்கை!!

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலி எழுப்பும் சாதனங்களின் ஊடான...

செம்மணியில் 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் நேற்று (22) 31 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. நேற்றுடன் 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 390 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நேற்று 07 என்புக்கூடுகள் அடையாளம்...

ஈரான் மீதான தடைகளை தளர்த்திய அமெரிக்கா!

பிராந்தியம் முழுவதும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் மீதான தடைகளை 60 நாட்களுக்கு அமெரிக்கா தளர்த்தியது. அதேவேளையில், அந்த ஒப்பந்தத்தின் கீழ் லெபனானில் மோதலில் தொடர்ந்து அமைதி நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான்...

இலங்கைக்குக் கடத்தவிருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான 300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை இந்தியக் கடலோரப் பாதுகாப்புக் குழுமப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மண்டபம் வடக்கு துறைமுகக் கடற்கரைப் பகுதியூடாக சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக்குத் தடை...

யாழில் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் வீடு!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா எனும் இராணுவ வீரருக்கு இராணுவத்தினரின் “சேவா வனிதா” திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியில் கட்டப்படும் இந்த வீடானது , எதிர்வரும் ஜூலை...

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறி விழுந்த இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். நேற்று மாலை (22) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தர்மபுரம், பிரமந்தனாறு பகுதியில் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குறித்த...

கட்டாரில் எரிவாயு ஆலையில் பயங்கர வெடிப்பு : 13 பேர் பலி, 66 பேர் காயம்!

கட்டாரின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் அமைந்துள்ள நாட்டின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு செயலாக்க மையத்தில், இந்த தொழில்நுட்ப விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது....

10 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரிய பொலிஸ் பரிசோதகர் கைது!

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. களுத்துறை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச்...

அனுமதியின்றி வாகன பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் ; மோட்டார் சைக்கிள் பறிமுதல் ; பலருக்கு எதிராக வழக்கு!

வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட, அனுமதி பெறப்படாத வாகனப் பேரணி ஒன்றின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பேரணியினர் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவர்களால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெரும் எண்ணிக்கையிலான...

தகுதியற்ற சுகாதார தொண்டர்களை தான் வெளிநாட்டில் இருந்தபோது பதில் பணிப்பாளரால் நியமனம்!! வைத்தியர் சத்தியமூர்த்தி குற்றச்சாட்டு

தான் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அடிப்படைத் தகுதி இல்லாத 58 பேரை சுகாதாரத் தொண்டர்களாக நியமித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார...

வடக்கு மாகாணத்தில் எஞ்சிய கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (22) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை...

வரிசெலுத்துவோர் அடையாள அட்டை இலக்கத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருப்பு!

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாண அலுவலகத்தில், வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதைக் காண முடிகிறது. இம்மாதம் 30 ஆம் திகதிக்கு பின்னர் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும். அபராதத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, யாழ். குடாநாட்டின் பல்வேறு...

இலங்கை தமிழர்களுக்காகவும் போராடியுள்ளேன்!

தமிழக சட்டசபையில் தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (23) கூடியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வும் இடம்பெற்று வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் வழங்கினார். இதன்போது உரையாற்றிய தமிழக முதலமைச்சர், தமிழ்நாடு சட்டசபையில் 12 கட்சிகளின்...
Loading posts...

All posts loaded

No more posts