வடக்கு மாகாணத்தில் ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு 25.06.2026 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண சபையால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைவாக, பின்வரும் பதவிகளுக்காகத் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கோரப்பட்டுள்ளனர்:
சிவில் பொறியியலாளர் – 10 வெற்றிடங்கள்
வரைவாளர் – 5 வெற்றிடங்கள்
தொழில்நுட்ப உத்தியோகத்தர் – 20 வெற்றிடங்கள்
வேலை மேற்பார்வையாளர் – 17 வெற்றிடங்கள்
ஆர்வம் மற்றும் தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் விவரங்களுக்கு அமைவாக நேரடி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்:
திகதி: 25 ஜூன் 2026
நேரம்: காலை 10 மணி
இடம்: பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாணம்.
கல்வித் தகைமைகள் மற்றும் இதர மேலதிக விவரங்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.