தமிழக சட்டசபையில் தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (23) கூடியது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்களின் திருத்தங்களை அவை ஏற்கும் நிகழ்வும் இடம்பெற்று வருகிறது.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் வழங்கினார்.
இதன்போது உரையாற்றிய தமிழக முதலமைச்சர்,
தமிழ்நாடு சட்டசபையில் 12 கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர். தமிழக மக்கள் என் நெஞ்சில் குடியிருக்கின்றனர். தவெக அரசை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி.
இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் இருந்துள்ளோம். விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவியாக இருந்துள்ளோம். தனது திரைப்படங்கள் மூலமாக சமூகநீதியை பேசியுள்ளோம்.
என் உழைப்பு உயர்வுக்கு தமிழக மக்கள் தான் பின்னால் உள்ளனர். மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை. சினிமா கேரியரில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம். 1990-களில் ரசிகர்க மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு நன்மை செய்தோம்.
கட்சிகள் கொள்கைகளால் வேறுபட்டிருந்தாலும் மக்கள் பணியாற்றவே வந்துள்ளோம். எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நினைத்து பேசினார் உதயநிதி ஸ்டாலின். நான் சூட்டிங்கில் இருந்து நேரடியாக வந்து CM ஆனதாக சிலர் கூறுவது ரீல் ரியல் அல்ல.
மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். கட்சி ஆரம்பித்தபின் வீட்டிற்குள் செல்வோர் மத்தியில், நம் மக்கள் வீட்டிற்குள் சென்ற பின் தான் கட்சி ஆரம்பித்தோம். 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடு இல்லை. நமது கட்சியை நடிகன் கட்சி என கூறி நக்கல், நையாண்டி செய்கிறார்கள். தவெகவின் மக்கள் சந்திப்பிற்கு அவ்வளவு தடைகள் விதிக்கப்பட்டது. நடிந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியின்றி தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளோம். கரூர் உயிரிழப்பு கொடூர சம்பவம் எப்போதும் நெஞ்சத்தை விட்டு அகலாது. தமிழகத்தில் தற்போது மிகமிக சாமான்யர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.