- Wednesday
- May 14th, 2025

தியாகி திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(15) யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆரம்பமானது. முன்னாள் போராளியான விடுதலை பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சமநேரத்தில் நல்லூரில் உண்ணாவிரத்த்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு...

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இருபாலையைச் சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற வேளை காளை மாடு முட்டி காயமுற்றவர் வீழ்ந்து கிடந்த...

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது. நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் இன்று 9 ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியோடு சேர்த்து இதுவரை 14 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழியின் எட்டாவது நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்ற நிலையில், ஐந்து மனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், அத்தோடு...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 09 மாதங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மயிலங்காடு பகுதியில், கடந்த ஜனவரி மாதம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார். இந்நிலையில் நேற்று...

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வலி வடக்கு பலாலி கிராம மக்கள் தமது...

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் க.பொ.த உயர்தர மாணவி காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த மாணவி தனது தாய்க்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கதைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விநாயகபுரம் பகுதியில் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவி ஒருவரை கண்டறிய அண்மையில் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. 18 வயதுடைய புவனேஷ்வரன் ஆர்த்தி என்ற மாணவி...

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன் எனவும் கொலை செய்த பின்னர் நானும் உயிரை மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் எனவும் பாட்டியார் பொலிஸாருக்கு...

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக்...

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொக்கு தொடுவாய் மனித புதை குழி அகழ்வுப் பணிகள் கடந்த 6 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 7 ஆவது நாளான நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியின் போது 3 மனித...

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். குருந்தூர் மலையில் பௌத்த துறவிகளின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு...

உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதேவேளை இப்போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு...

023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும்...

திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸாரின் விசாரணையில் குறித்த பாட்டியும், பேத்தியும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கடந்த சில நாட்களாகக் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர் என்பதும்,...

இலங்கை கடற்பரப்பின் நெடுந்தீவுக்கு அண்மித்த பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 19 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது அவர்கள் பயணித்த 3 படகுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்த கடற்படையினர், அவர்களை நீரியல்...

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு ஏக்கரும் மூன்று றூட் அளவிலான காணியொன்று இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் யுத்த வெற்றி நினைவு தூபிக்கு பின்பகுதியில் உள்ள கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு செல்லும் வீதிக்கான காணியே இவ்வாறு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொது காணிகள் மற்றும் மக்களின் காணிகளை விடுவிக்கும் நிகழ்ச்சிச்...

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454 என்ற Whats App தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதேநேரம்...

”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களில் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் நேற்று (13) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால்...

All posts loaded
No more posts