சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது...

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச ஒத்துழைப்புடன் முன்னெடுங்கள் – காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம்

ஏனைய மனிதப்புதைகுழி விவகாரங்களில் கடைப்பிடிக்கப்பட்ட மெத்தனப்போக்கை விடுத்து, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளுமாறு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பிரிட்டோ பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் செவ்வாய்க்கிழமை (5) மீண்டும் ஆரம்பமாகின்றன. சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக...
Ad Widget

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார். புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 57 வயதான ரெஸ்னிகோவ்,...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் போராட்டம்!!

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்ட நிறைவில் கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு யாழ் மாவட்ட செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த மனுவில், யாழ் மாவட்டத்தில்...

போதைப்பொருள் கடத்தலுக்காக மாற்றியமைத்த கெப் வாகனத்துடன் ஐவர் கைது!

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது, சந்தேகத்திற்கு...

பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் , அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்...

யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தம்!!

ஊழியர் பற்றாக்குறை காரணமாக யாழ்.மாவட்ட காணி பதிவகம் முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 24ஆம் திகதி முதல் காணி பதிவகத்தில் ஒருநாள் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளமையால் , பலரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அது தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.மாவட்ட காணி பதிவகத்தில் இரு உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றி வந்த நிலையில் ஒருவர் சுகவீனம் காரணமாக விடுப்பில் உள்ளார்....

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமாகியது!!

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தலைமையில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும்...

பேருந்து கட்டணமும் அதிரடியாக அதிகரிப்பு!!

நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து கட்டண திருத்தம்மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை...

QR முறை நீக்கப்பட்டுள்ளது- காஞ்சன விஜேசேகர!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசகதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை!!

குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதிக் கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இறங்கு துறையின் கீழ் பகுதியில் இருக்கும் இரும்புகள் துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுவதனால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறங்கு துறை பகுதிக்கு மனித வலுவை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்று...

காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்த வேண்டும் – விக்கினேஸ்வரன்

வட- கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள்...

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

எரிபொருள் விலைகள் நேற்று வியாழக்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், அதன் புதிய விலை 361 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில்...

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம்: சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் பங்கு கொள்ளும் சட்டத்தரணிகளுக்கு புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றையதினம் (31.08.2023) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே இந்த...

மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்: நகரை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ள விமானங்கள்!!

உக்ரைன் - ரஷ்யா போர் 18 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீண்டும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய நிலப்பரப்பு மீதான தாக்குதல் போரில் தவிர்க்க முடியாதது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,சுமார் 100 மேற்பட்ட விமானங்கள்...