Ad Widget

பதவியிலிருந்து நீக்கப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர்!!

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸி ரெஸ்னிகோவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதிய பாதுகாப்பு அமைச்சராக உயர் பதவியிலிருந்த ரஸ்டெம் உமெரோவ் ஐ நியமித்துள்ளார்.

புதிய நியமனத்தை அறிவித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போருக்கு புதிய போர்வையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

57 வயதான ரெஸ்னிகோவ், ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய 2022 முதல் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் பலத்த விசாரணைகள் இடம்பெற்று வரும் பின்னணியில் இவ் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ள போதிலும் றெஸ்னிகோவ் மீது நேரடியாக எவ்வித ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்திற்கான புதிய தூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts