பூசகரை வழிமறித்து வாள் முனையில் கொள்ளை!!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூசகர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை வீதியில் வழிமறித்த மூவர் அடங்கிய கொள்ளை கும்பல் , அவரை வாள் முனையில் அச்சுறுத்தி அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts