Ad Widget

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபாடு மேற்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை (27) உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதியில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு சம்பவத்தில் படுகாயமடைந்த 100 வயது மூதாட்டியும் உயிரிழப்பு!!

நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவத்தில் கத்தி வெட்டுக்கு இலக்காக படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 100 வயது மூதாட்டியான பூரணம் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர்...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும்...

பேருந்துகளில் ஏற்றாமல் செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்!

முல்லைத்தீவு- துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் இருந்து வீடு வரவும் மிகவும் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பினருக்கும் குறிப்பாக வடமாகாண ஆளுநர், வடமாகாண...

புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரகசிய ட்ரோன் விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானமொன்றினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த ட்ரோன் விமானம் பாதி வழியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஜேர்மன் ஊடகமொன்று அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரைன் உளவுத்துறை 17 கிலோ வெடிப்பொருட்களுடன் UJ-22 ரக ட்ரோன் விமானத்தை கடந்த ஞாயிறன்று அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யாவின் தொழிற்பேட்டைக்கு புடின் வருகை...

எச்சரிக்கை..! மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

நேற்றைய தினம் (26) 7 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (25), இலங்கையில் இருந்து நான்கு கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டது – யாழ்.ஆயர் இல்லம்

கச்சதீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. ஆயர் இல்லம் சார்பில் யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளனர். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியில் கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கச்சதீவில் புத்தர் சிலை...

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பம்!!

வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு வழிபாடு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு ஒலுமடு கிராமசேவகர் பிரிவில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களம், பொலிஸ் ஆகியோரினால் வழிபாட்டுக்கு இடையூறாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பூசைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களை இனம் தெரியாத...

காலாவதியான சோடா போத்தல்கள் யாழ் நகரில் விற்பனைக்கு!! மக்களே அவதானம்!!

யாழ்.மாநகரில் இடம்பெற்ற பாரிய மோசடி வியாபாரம் அம்பலமாகியுள்ளதுடன், மோசடி வியாபாரி மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் யாழ்.நகர பகுதியில் உள்ள சில கடைகளிற்கு காலாவதியான சோடா போத்தல்களை காலாவதி திகதியில் மாற்றம் செய்தும், காலாவதி திகதியை அழித்தும் ஒரு விநியோகஸ்த்தர் விற்பனைக்காக வழங்குவதாக யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு இரகசிய தகவல் கிடைக்கபெற்றது....

நல்லுாரை சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நல்லுார் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு - வவுனிக்குளத்தில் இடம்பெற்றிருக்கின்றது. மரண வீட்டில் கலந்துகொள்ள முல்லைத்தீவு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குளத்தின் பிரதான வாய்க்கால் பகுதிக்குள் இளைய சகோதரர் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர் நீரில் தத்தளிப்பதைக் கண்டு மூத்த சகோதரர்...

நெடுந்தீவு ஐவர் படுகொலைக்கும் இராணுவம், கடற்படைக்கு தொடர்பு?? – சிறிதரன்

நெடுந்தீவில் ஐந்து வயோதிபர்கள் கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து நபர் ஒருவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை , இராணுவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில்...

EPF-ETF தொடர்பில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அதிர்ச்சி தகவல்!!

தேசிய கடன்களை மறுசீரமைத்தால் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இரத்து செய்ய நேரிடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (26.04.2023) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“2015 ஆம் ஆண்டு...

பிரித்தானியாவை தாக்க தயாராகும் ரஷ்யா!! பிரித்தானியா வெளியிட்ட அவசர எச்சரிக்கை!!

பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை நடத்தப்போகிறது என்கின்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே உலகின் பிரதான ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. அச்சத்தில் ஆழ்த்தக்கூடிய இதுபோன்ற செய்திகள் ஒருபக்கம் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் அதேவேளை பிரித்தானிய அரசாங்கம் விடுத்திருந்த ஒரு அவசர அறிவிப்பும் மேலும் பிரித்தானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (23.04.2023)...

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

கொடிகாமம் எருவன் பகுதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை - கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் சாரதா...

முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றி!

நேற்று (25) செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு :...

நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி

நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அத்தகைய நடத்தைக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகின்றது, 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை பிள்ளைகளுக்கு...

ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய பிடிவிராந்து!!

தென்னாப்பிரிக்காவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகின்றது. உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியானை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து...

சிறுவர்கள், கர்ப்பிணிகளுக்கு சுகாதார தரப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் நிலவும் அதீத வெப்பநிலை காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் ஆகியோர் நீரிழப்பு அபாயத்தில் உள்ளதாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர், வைத்தியர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார். ஆகையினால், ஆபத்திலுள்ளவர்கள் சூரிய ஒளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்பதுடன், நீரிழப்பைத் தவிர்க்க போதியளவு நீர் அருந்த வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்....

அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு தொடர்ந்தும் நடைமுறையில்!!

பண்டிகை காலத்தையிட்டு அதிகரிக்கப்பட்ட வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரையில் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

மருத்துவருக்கு உயிர் அச்சுறுத்தல்!! சுகாதார நிலைய சேவைகள் இடைநிறுத்தம்!!

மருத்துவருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து புத்தூர் ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவின் மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குழு ஒன்றினால் மருத்துவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுடன் அவரது அலுவலகத்துக்கும் சேதம் விளைவித்தமை தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கடைசி பங்குனித் திங்கள் தினமான ஏப்ரல் 10ஆம் திகதி...
Loading posts...

All posts loaded

No more posts