Ad Widget

இன்று முதல் பாடசாலைக்கு விடுமுறை!!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற...

முல்லைத்தீவில் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிப்பு !!

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமமான கருநாட்டுக் கேணியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்து. குறித்த பகுதியில் பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள தமிழர்களுக்குரிய காணிகளே அபகரிக்கப்பட்டு 180 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த சிங்கள குடியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் குறித்த...
Ad Widget

ரஷ்ய வீரர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

உக்ரைன் - ரஷ்ய போர் ஓராண்டினை கடந்துள்ள நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த போர் நடவடிக்கையில் போது ரஷ்ய வீரர்கள் அதிகப்படியாக மது அருந்தி போதையில் போரிட்டுள்ளமையே உயிரிழப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த போர்...

சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் இன்புளுவன்சா வைரஸ்!!

இன்புளுவன்சா A வைரஸ் சிறுவர்களிடையே அதிகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சை நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய நாட்களில் பகலில்...

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை சவால் செய்து வழக்குத் தாக்கல் !

நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குறித்த வழக்கை இன்றையதினம் (03) தாக்கல் செய்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மாநகர சபையினை நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து வெளியேற பணித்ததுடன் அதனை புத்த...

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இருப்பினும்...

யாழில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை : துன்புறுத்தலுக்கு உள்ளன 14 சிறுமிகள் மீட்பு

இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 14 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே இவர்கள் என்றும் அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருபாலை பகுதியில் உள்ள...

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி!!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம் பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது....

பயங்கரவாத தடை சட்ட மூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிக்க வேண்டும்: சுமந்திரன்

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்ட மூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (01.04.2023 ) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். சுருக்கு வலை உட்பட்ட சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று (03.04.2023) வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்லமுடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். கடற்தொழிலாளர்கள் வாழ விடு...

தீவிரமடையும் போர்களம்!ரஷ்யா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!!

போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படை வீரர்களுக்கான வெடிமருந்துகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergey Shoygu) தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளுக்கு மிகவும் தேவையான வெடி மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்பட்டது என்றும், அவற்றை அதிகரிக்க மாஸ்கோ நடவடிக்கை எடுத்துள்ளது...