Ad Widget

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் – அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இந்த காணொளி தொடர்பில் வடமாகாண...

அரச வங்கியொன்றிலிருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான தங்க நகைகள் மாயம்!

அரச வங்கியொன்றிலிருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் காணாமல்போயுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தங்கப் பாதுகாப்புக் கடனைப் பெறுவதற்காக அடமானம் வைக்கப்பட்ட தங்கப்கையிருப்பை சேமிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​தங்கம் அடங்கிய பெட்டகத்தில் நகைகள் காணாமல்போயுள்ளமை தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்....
Ad Widget

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளரை அறிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியின் மத்திய...

வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும்...

யாழ் . போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற கறுப்பு வாரத்தின் முதல் நாளான நேற்று இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச வைத்தியசாலையில் நிகழும் மருந்துத் தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் நடவடிக்கைகளில் அதிருப்தி:மக்கள் விசனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தகாத முறையில் இருவர் நடந்துக்கொண்டுள்ளனர். கடந்த 17ஆம்திகதி வீட்டில் யாருமற்ற நிலையில் 45வயது மதிக்கத்தக்க நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண் தனித்திருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவர் குறித்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த பெண் கூக்குரலிட்ட நிலையில் வீட்டிலிருந்த தொலைபேசி...

இலங்கையில் கையடக்க தொலைபேசியில் நடைமுறைக்கு வரவுள்ள ஓட்டுநர் உரிமம்

கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும், அது கையடக்க தொலைபேசிக்கு வழங்கப்படும் எனவும்...

45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களிடமும் வரி விதிக்க IMF பரிந்துரை

கடினமாக இருந்தாலும் மக்கள் வரிச்சுமையை சுமக்க வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். 45,000 ரூபாவுக்கு மேல் மாதாந்த வருமானம் உள்ள அனைவரிடமும் வரி அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த போதிலும், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அதனை 100,000...

உக்ரைனுக்கு உதவ நேட்டோ நாடுகள் தயக்கம்!!

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்கினால், அதற்கான தண்டனையை உக்ரைன் மக்கள் அனுபவிப்பார்கள் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கரடு முரடான பாதைகளில் கூட மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய லியோபர்டு கவச பீரங்கிகளை உக்ரைனுக்கு வழங்க ஜெர்மனி தொடர்ந்து தயக்கம் காட்டிவருகின்றது. இருப்பினும் அமெரிக்கா, பித்தானியா போன்ற நாடுகள் வலியுறுத்தியும் ஜெர்மனி தயக்கம்காட்டுவது, நேட்டோ...

முதல்வர் தெரிவில் தனது தலையீடு இருக்கவில்லை : வடக்கு ஆளுனர்!

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் மட்டுமே தங்கிருப்பதாவும் வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார். இமானுவேல் ஆர்னோல்ட்நியமிக்கப்பட்டதாக தெரிவித்து சனிக்கிழமை வெளிவந்த வர்த்தமானி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்தில் தஞ்சம்!

இலங்கை தமிழர்கள் 5 பேர் இன்று (திங்கட்கிழமை) காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு...

உயர்தரப் பரீட்சைகள் காலப்பகுதியிலும் மின்வெட்டு!!

2022 உயர்தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள நிலையிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்தும் மின்வெட்டுகளை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று ஏ முதல் எல் மற்றும் பி...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் இன்று (திங்கட்கிழமை) பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின்னல்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரகம் மாற்று சிகிச்சை வெற்றி!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது. வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியத் துறையினரதும் பங்கேற்புடன் கடந்த 18ஆம் திகதி நீண்ட நேரமாக மேற்கொண்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 17 வயதான யுவதிக்கு அவரது தாயாரால் சிறுநீரகம் தானம் செய்யப்பட்ட நிலையில் அது வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது....

உயர்தர பரீட்சை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (23) உயர்தரபரீட்சைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் உட்பட பொதுமக்களிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

நடமாடும் தகன மேடைகளை வாங்கி குவிக்கும் ரஷ்யா!

சீனாவிடம் இருந்து 21 நடமாடும் தகன மேடைகள் வாங்க ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. குறித்த தகன அறைகளை துருப்புகளுடன் சேர்ந்து அனுப்பி வைக்கவும், இதனால் பொதுமக்களிடமிருந்து ரஷ்யாவின் போர் இழப்புகளை மூடிமறைக்கும் முயற்சியில் புடின் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகன மேடைகளை கொண்டு உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல்,...

யாழ்.பல்கலைக்கழகப் பேரவைக்கான புதிய வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் நியமனம்

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக 9 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 புதிய வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...

நல்லூரில் கட்டுப்பணம் செலுத்தினார் ஐங்கரநேசன்!

முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(வெள்ளிக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் ஹெரோயின் பாவனையால் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10ஆம் திகதி இவர்...

யாழ்ப்பாணம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!!

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், ஆசியாவிலேயே மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ள 18 இடங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. CNN Travel’sஇனினால் மதிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை விபரிக்கும் CNN Travel’s, பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தெற்கு கடற்கரை அல்லது அதன் மத்திய மலை நாட்டிற்குச் செல்வதாக குறிப்பிட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts