Ad Widget

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது. இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐஸ் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர்களும் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகரிப்பானது...

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வட மாகாண வீதி பயணிகள்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
Ad Widget

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் கைத்தொலைபேசி பயன்படுத்த தடை??

அரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அலுவலகங்களுக்குள் கைத்தொலைபேசி பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன கூறியுள்ளார். புத்தாண்டுக்கான பணிகளைத் தொடங்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில இடங்களில் அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் பேஸ்புக், வட்ஸ்அப்பில் உலாவிய படி சேவைகளைப் பெற வந்த...

குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில்!

வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் 34 வயதான பெண் ஒருவருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது, பிறந்த 4 நாட்களான...

எரிபொருள் விலை குறைப்பு!!

நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 405 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் – டயனா கமகே!

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார...

ஒரே இரவில் உக்ரைனுக்குள் தொகையாக நுழைந்த விமானங்கள்:முற்றாக தாக்கி அழிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதுமட்டுமன்றி புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா 20 ஏவுகணைகளையும் வீசியதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில்...

பொலிஸாரினால் 2 வருடங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 17 வயது சிறுமி!!

ஆபாச காணொளிகளை காட்டி, மிரட்டி பதின்ம வயது சிறுமியை கடந்த 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நிவாரணம் தருவதாக 17 வயது சிறுமியை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைத்துச் சென்று, ஆட்களற்ற வீடொன்றினுள் வைத்து...

கிளிநொச்சியில் புத்தாண்டியில் கொடூர கொலை!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.​ நேற்று (01) காலை வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.​ கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.​ காயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள்...

திலீபனை நினைவு கூர்ந்த விவகாரம்: கொழும்பில் சிவாஜிக்கு எதிராக வழக்கு !

தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமை தொடர்பான வழக்கிற்காக எம்.கே. சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் அவரது வீட்டிற்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸார் எதிர்வரும் 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என்ற நீதிமன்ற கட்டளையை வழங்கியுள்ளனர். நீதிமன்ற தடையை மீறி தியாகதீபம் திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக கடந்த 2020...

நெல்லியடி கூட்டு பாலியல் வன்புணர்வு : 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!

நெல்லியடியில் கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் 09 வருடங்களின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளி பகுதியில் பெண்ணொருவர் கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,...

தீர்வை வழங்குவது அரசின் கடப்பாடு – சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார். அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு,...

இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது புதிய வரி கொள்கை!

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய வரி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுவோருக்கு 06 வீதம் தொடக்கம் 36 வீதம் வரை 06 கட்டங்களாக வருமான வரி அறவிடப்படவுள்ளது. மாதமொன்றுக்கு 3 இலட்சத்து 50 ஆயிரத்து ரூபாவை வருமானமாக பெறும் ஒருவர் ஒரு மாதத்திற்கு...

மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில் ஒரு மணிநேரமும்...

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(02.01.2023) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பில் புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட திகதியில் உயர்தர பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட்டு வருவதாக புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை சாரதி அனுமதி பத்திரம்

இலங்கை ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, இந்த ஆண்டு முதல் QR குறியீட்டுடன் கூடிய புதிய ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குஸலானி டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையர்களுக்கு நான்கு வகையான ஓட்டுநர் உரிமங்கள் உள்ளதெனவும் அவர் குஸலானி டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்....

200க்கும் மேற்பட்ட ரஷ்யா-உக்ரைன் சிறைக் கைதிகள் பரிமாற்றம்

புத்தாண்டு தினத்தில் ரஷ்யாவுடனான சிறை பரிமாற்றத்தில் உக்ரேனிய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது உக்ரேனிய கைதிகள் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே 300 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், தற்போது இரு நாடுகளும் 200க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளன. மாஸ்கோவிற்கும், கீவ்விற்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் முழுமையான...