Ad Widget

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண கடமைகளை பொறுப்பேற்றார்!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ப்ரியந்த வீரசூரிய, மத்திய மாகாணத்திற்கு...

அரசு ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!!

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசாங்க செலவினங்களை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேரம் மற்றும்...
Ad Widget

முக்கியமான கட்டத்தில் உக்ரைன் ரஷ்ய போர்! பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்சுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது இருநாடுகளும்...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழிலும் போராட்டம்!

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சம்ஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும்ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தின் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும் – ஜெயசேகரன்

கப்பல் சேவை மூலம் வடமாகாணத்தை பொருளாதாரத்தில் முன்னேற்ற கூடிய சாத்தியம் இருப்பதாக யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார். இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான காகோ சிப் கப்பல் சேவை இந்த மாதம் (தை மாதம்) இறுதியில் ஆரம்பிக்கப்படும்...

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால்...

சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!

லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: 12.5 கிலோ சிலிண்டர் – 4,409 ரூபாய் (201 ரூபாய் குறைப்பு) 5 கிலோ சிலிண்டர் – 1,170 ரூபாய்...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும்...

குறைக்கப்படுகின்றது சமையல் எரிவாயுவின் விலை!!

நாட்டில் இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும்வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. Tags: எரிவாயுசமையல்

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தலைவர் இ.இரவீந்திரன் தெளிவுப்படுத்தியுள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களிற்கிடையேயான...

யாழ். மாநகர சபை விவகாரம்: ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

மக்களின் ஜனநாயக தேர்தல் மூலம் உருவாக்கப்பட்ட மாநகர சபை நீடிப்பதை விரும்புகிறேன் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். மாநகர சபை விவகாரம் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுக்க உள்ளீர்கள் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “மாநகர சபை முதல்வர்...

சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள்

சீனாவில் கோவிட் பரவல் காரணமாக மருத்துவமனைகளும் தகன இல்லங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், தகன இல்லங்களில் சடலங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சீன சுகாதாரத்துறை கோவிட் இறப்பு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. மக்களின் எதிர்ப்பு காரணமாக கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தியுள்ள நிலையில், கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதுடன் 90 நாட்களில்...

ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லியமாக தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய இராணுவ நடவடிக்கை 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷ்ய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷ்ய...

18 ஆம் திகதி முதல் வேட்புமனு கோரல்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

யாழில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கண்காட்சி!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில்...

கத்தி முனையில் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில் , மிரட்டி 10 பவுண் தங்க...

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காலை கட்சி ரீதியாக உறுப்பினர்களை சந்திக்கும் நோக்குடன் , ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு...

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் தமிழ் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்!!

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் பங்கேற்க விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட் சபை அனுமதி வழங்கியுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்காக இலங்கையின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, Chattogram Challengers அணியுடன் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்தநிலையில் குறித்த தொடரில் பங்கேற்பதற்கு விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு இலங்கை கிரிக்கட்...

உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்! உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்ட ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 314 ஆவது நாளை எட்டியுள்ளதுடன் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதன்போது கிழக்கு உக்ரைனில் உக்ரைன் படைகள் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள மகீவ்கா நகரில் தற்காலிக இராணுவ தளத்தில் 600 வீரர்கள்...

வடமாகாணத்தில் சிறுநீரக நோய், குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படும்!!

வடமாகாணத்தில் அப்பிரதேச மக்களின் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில்...
Loading posts...

All posts loaded

No more posts