Ad Widget

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் – விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியை வரவேற்றார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றதை...

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகின்றது

அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்க சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ad Widget

ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார். உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜன் அவர்களுடைய...

8 கோடி பெறுமதியான புனரமைப்பு வேலையை நிறுத்திய மாநகர முதல்வர் ஆனோல்ட்!! வன்மையாக கண்டிக்கும் மணிவண்ணன்!!

யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் இன்று உத்தரவிட்டதை, யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்....

போரில் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம்!!

உக்ரைன் - ரஷ்ய போர் 341 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் போரில் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என நம்புவது முட்டாள்தனம் என்று குரோஷிய அதிபர் ஷொரன் மிலனொவிக் தெரிவித்துள்ளார். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார...

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாணின் விலையும் உயரும் அபாயம் !

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது...

நாட்டினுடைய சுதந்திர தின நாள் தமிழர்களின் வாழ்வில் கரிநாள் – சுமந்திரன்

ஜனநாயகம் என்ற போர்வையிலே பேரினவாத ஆட்சி காரணமாகவே சுதந்திரம் கிடைத்தும் 75 ஆண்டுகளாக தமிழர்களுக்கு சுந்தந்திரம் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிங்கள மக்களுக்கு அரசியல் சுதந்திரம் இருந்தாலும் இன்றைய சூழ்நிலையை பார்க்கின்ற பொழுது சிங்கள மக்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாககின்றது என்றும் குறிப்பிட்டார். சுதந்திரதினம்...

நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கும்

நாளையிலிருந்து நாடு முழுவதும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதி நாடு முழுவதும் பல இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது...

இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கான சுதந்திர தினம் அல்ல: யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்களுக்கு கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக...

20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை

பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்குடன் அரச சேவையில் உள்ள 20 ஆயிரம் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 2018 - 2019 மற்றும் 2020ம்...

ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன்! உண்மையை மறைக்கும் ரஷ்யா

உக்ரைன் மீதான படையெடுப்பு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இருத்தரப்பினரும் எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனின் - மகீவ்கா நகரில் படைகள் நடத்திய தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்,ரஷ்யா உண்மைத் தகவலை மறைத்துள்ளதாகவும் உண்மையான இறப்பு எண்ணிக்கை 300 தாண்டும் என்றும்...

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்திய சாலை வீதியில், வேம்படி சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்தில் , சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றைய தினம்...

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்!

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாகப் பதவி வகித்தவர்களின் பதவிக் காலம் கடந்த 15 ஆம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 16 ஆம் திகதி முதல் அடுத்துவரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் மேலும்...

மீற்றர் வட்டி மாபியாக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பொலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களை அடித்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வட்டி மாபியாக்களுடன் தொடர்புடைய பொலிஸாரையும் அடையாளம் கண்டு சட்டத்தின் முன்னால் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். மீற்றர் வட்டி கும்பலுக்கு சுன்னாகம் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் நெருங்கிய தொடர்புள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாகத்...

யாழில் குடும்பஸ்தரை கொலை செய்த மனைவி உட்பட 11 பேர் கைது!!

கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி, உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடாத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் எனக்...

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த அவரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி...

போரில் நேரடியாக பங்கேற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!!

உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவினை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தமது இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து ஒரு வருடத்தை நெருங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு இராணுவத்தினரும் பதிலடி கொடுத்து...

யாழ். மாநகர முதல்வரிடம் அதிகாரங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிவித்துள்ளார். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த வருடம் டிசம்பர் 31 ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்டாத காரணத்தினால், இம் மாதம் 20 ஆம் திகதி...

சுன்னாகம் சம்பவம் – மூவர் பொலிஸில் சரண்!

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீ வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த மூவர் சட்டத்தரணி ஊடாக நேற்று (25) சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை – வெட்டு புள்ளிகள் வெளியாகின!

கடந்தாண்டு டிசெம்பர் 18 ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்க ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி பெறுபேறுகளை பரீட்சை திணைக்க இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திலோ அல்லது,results.exams.gov.lk என்ற இணையத்தளத்திலோ பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ரீதியாகவும் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த...
Loading posts...

All posts loaded

No more posts